மாணவர்களேடு கை கோர்த்த ஆட்டோ ஓட்டுனர் ............... மதுரையில் நடந்த மாணவர் போராட்டத்தின்போது ஒரு ஆட்டோ டிரைவர் அனைவரையும் கவர்ந்திழுத்தார். மிகத்தீவிரமாக தமிழ் ஈழத்தை ஆதரித்தும், இலங்கையைக் கண்டித்தும் கோஷம் எழுப்பிய அவர் பேசிய பேச்சுதான் அட்டகாசமானது. அவரது பெயர் நாகராஜ். பெரியார் பேருந்து நிலையத்திற்கு சவாரி வந்தவர். வந்த இடத்தில் நடந்த தமிழ் ஈழ ஆதரவு போராட்டத்தைப் பார்த்து அதில் இணைந்து கொண்டார். சுமார் 5 மணி நேரம் போராட்டத்தில் அவர் பங்கேற்றார். அப்போது அவர் திரண்டிருந்த மாணவர்களிடம் தனது ஆட்டோ மீது ஏறியபடி பேசுகையில், தம்பிகளா இத்தனை வருஷமா மனசுக்குள்ள வச்சிக்கிட்டு குமுறிகிட்டு இருந்தேன்பா..... நீங்கல்லாம் போராட ஆரம்பிச்சதுக்கு அப்புறம் தாம்ப்பா நிம்மதியா இருக்கு. என் மகன் காலேஜுல படிக்குறான்.... போடா போய் போராடு அப்படின்னு அனுப்பிட்டேன்... இனிமேல் மதுரைல உங்க போராட்டம் நடக்கும் போது போன் போடுங்க .. நேரம் கிடைக்கும் போது கலந்துக்குறேன். எப்பாடு பட்டாவது ஈழ மக்களுக்கு நல்லது ஏதாவது நடக்க வைக்கணும்யா"என்றாரே பார்க்கலாம். நாகராஜ் தனது ஆட்டோவின் பின் புறத்தில் பிரபாகரன
இடுகைகள்
மார்ச், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
சட்டசபையில் அடிதடியில் ஈடுபட்ட தேமுதிகவின் 6 எம்.எல்.ஏக்கள் ஓராண்டுக்கு சஸ்பென்ட்: சபாநாயகர் உத்தரவு! சட்டசபையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசியதற்காக தேமுதிகவின் அதிருப்தி எம்.எல்.ஏ. தமிழழகனை மற்ற தேமுதிக எம்.எல்.ஏக்கள் தாக்க முயற்சித்தனர். இதை மற்றொரு தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன் தடுக்க முயன்றார். இதனால் அவர் கடுமையாகத் தாக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக தேமுதிக எம்.எல்.ஏக்கள் முருகேசன், அருள்செல்வன், செந்தில்குமார், பார்த்தசாரதி, நல்லதம்பி, கொறாடா சந்திரகுமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி சட்டசபையின் உரிமைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று காலை சட்டசபையில் உரிமைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தேமுதிக எம்.எல்.ஏக்கள் 6 பேரும் தமிழக சட்டசபையில் இருந்து ஓராண்டு காலத்துக்கு சஸ்பென்ட செய்யப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். இந்த ஓராண்டு காலம் எம்.எல்.ஏக்கள் என்ற தகுதியை அவர்கள் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு தேமுதிக எம்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
மனித நேயம் மரிக்கவில்லை ............. சென்னை அமைந்தகரை போக்குவரத்து பிரிவின் தலைமைக் காவலர் ரவி (38). அவர் அதிகாலை தேனாம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இருந்து வேலைக்கு பைக்கில் புறப்பட்டார். அமைந்தகரை கூவம் பாலத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, கூவத்தை எட்டிபார்த்தபடி 20க்கும் மேற்பட்டோர் நின்றிருந்தனர். இதனால் பைக்கை ஓரத்தில் நிறுத்திவிட்டு அவரும் எட்டிப் பார்த்தார். அப்போது கூவத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், நெஞ்சு பகுதி முழுவதும் மூழ்கிய படி காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கூக்குரலிட்டபடி இருந்தார். பொதுமக்கள் யாரும் காப்பாற்றவில்லை. உடனே ரவி மடமடவென கூவத்துக்குள் இறங்கினார். ஆழமாக இருந்ததால் முதியவர் பக்கத்தில் செல்ல முடியவில்லை. அங்கு கிடந்த நீளமான சவுக்கு கம்பை எடுத்து, அந்த முதியவரை பிடித்துக் கொள்ளச் சொன்னார். ஆனால் கம்பு அவருக்கு எட்டவில்லை. பின்னர், ரவி தனது ஷூவில் இருந்த கயிற்றை கழற்றி கம்போடு இணைத்து, அதை பிடித்துக் கொள்ளுமாறு முதியவரிடம் கூறினார். அவரும் அப்படியே செய்ய, அதை பிடித்து முதியவரை இழுத்து வெளியே கொண்டு வந்து காப்பாற்றினார் ரவி. முதியவ
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
வைகோ தலைமையில் தூத்துக்குடியில் நடைபெற்ற முற்றுகை போராட்டம் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட 750 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையினால் 40 கிலோ மீட்டர் தூரத்தில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமானோர் புற்றுநோய்க்கு ஆளாகியுள்ளனர் என்பது புகார். கடந்த சில தினங்களுக்கு முன்பு விஷவாயு பரவியதில் தூத்துக்குடி நகர் முழுவதும் ஏராளமான மக்கள் மூச்சுத்தினறல் ஏற்பட்டது. இதை மாவட்ட நிர்வாகம் மூடி மறைத்துவிட்டது என்பது பல்வேறு அரசியல் கட்சியினரின் புகாராகும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் இன்று காலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும், மீனவர்சங்கம், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தின் போது மாவட்ட ஆட்சியருக்கு எத