வைகோ தலைமையில் தூத்துக்குடியில் நடைபெற்ற முற்றுகை போராட்டம்
ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட 750 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையினால் 40 கிலோ மீட்டர் தூரத்தில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமானோர் புற்றுநோய்க்கு ஆளாகியுள்ளனர் என்பது புகார். கடந்த சில தினங்களுக்கு முன்பு விஷவாயு பரவியதில் தூத்துக்குடி நகர் முழுவதும் ஏராளமான மக்கள் மூச்சுத்தினறல் ஏற்பட்டது. இதை மாவட்ட நிர்வாகம் மூடி மறைத்துவிட்டது என்பது பல்வேறு அரசியல் கட்சியினரின் புகாராகும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் இன்று காலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும், மீனவர்சங்கம், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தின் போது மாவட்ட ஆட்சியருக்கு எதிராகவும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் அவர்கள் முழக்கமிட்டனர். இதனைத் தொடர்ந்து வைகோ உள்ளிட்ட 750க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

கருத்துகள்
கருத்துரையிடுக