மரம் நடுவதற்கு அனுமதியுங்கள்........................... கோவையை சார்ந்த தாய் மரம் என்ற குழுவினர் மரம் வளர்ப்பதை ஊக்குவிப்பதிற்காக ஒரு புதிய அமைப்பு ஒன்றை நிறுவி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.அதன் செயல் வடிவம் பின்வருமாறு: உங்கள் நிலத்திலோ, வீடுகளிலோ பயன்படுத்தாத உபரி இடம் இருந்தால் மரம் நடுவதற்கு அனுமதியுங்கள். மரம் நடுவதற்கு ஏற்ற இடம் உருவாக்கி கொடுக்க வேண்டும் என்பதே உங்களிடம் நாங்கள் எதிர்ப்பார்ப்பது. ப்ரணவ பீடம் அறக்கட்டளை நட்சத்திர மரங்களை இலவசமாகவே வழங்க இருக்கிறது. உங்களுக்கு மரம் நடும் ஆர்வம் இருந்தால் எங்களுடன் இணைந்து கொள்ளலாம். மற்றவை இயற்கை தானாகவே பார்த்துக்கொள்ளும். சில இயற்கை அமைப்புக்கு உகந்த நிலையில் நட்சத்திர மரக்கன்றுகளை நடுவதன் மூலம் சுற்று சூழலை தன்வசமாக்கி மரங்கள் ஆதிக்கம் செலுத்த துவங்கும். அதனால் மாசுபடுதல் குறையும் மற்றும் தாவர இனப்பெருக்கம் அதிகரிக்கும். இந்த பணியை இலவசமாகவே செய்கிறோம். மரக்கன்றுகள் இலவசம். முதல் சில வருடங்களுக்கு இலவச பராமரிப்பும் செய்கிறோம். குறைந்த பட்சம் 5 சென்ட் பயன்படுத்தாத இடம் தேவை. அதிகமாக எத்தனை பெரிய இடமாக இருந்தாலும
இடுகைகள்
ஏப்ரல், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
அம்மா உணவகம். விலை மதிப்பில்லா உணவகம்...! கண்ணாடி கதவுகள் நம்மை வரவேற்க உள்ளே நுழைந்தவுடன் ஒரு டோக்கன் கவுன்ட்டர் இருக்கிறது. ஒரு இட்லி ஒரு ரூபாய். ஒரு டோக்கன் கூட கொடுக்கப்படுகிறது. ஐந்து ரூபாய்க்கு ஐந்து டோக்கன்கள். அதன் பிறகு வரிசையில் நின்று இட்லிகளை வாங்கிகொள்ளலாம். டைல்ஸ் பதிக்கப்பட்ட பளீர் அறை. காற்றோட்டமாகவும். மின் விசிறிகள், ஈக்களை விரட்டும் ஈ விரட்டி இயந்திரம்.....நின்று கொண்டு சாப்பிட ஏதுவாக வட்ட வடிவிலான டைனிங் டேபிள்கள், உணவு கொடுக்கும் தட்டுகள் கூட சுத்தமாக துலக்கப்பட்டுள்ளன. பணிபுரியும் பணியாளர்கள் சுத்தமான ஆடைகள் உடுத்தி...உணவு சமைக்கும், பரிமாறும் பெண்கள் தலையில் "கவர்" அணிந்து இருக்கிறார்கள்.... கைகளில் க்ளவுஸ் அணிந்தே பணிபுரிகிறார்கள். இட்லிக்கு சாம்பார் மட்டும் தரப்படுகிறது. மாற்று திறனாளி ஒருவருக்கு, அவர் வரிசையில் நிற்க முடியாது என்பதால் டோக்கன் அளிக்கும் பெண்மணியே உணவை வாங்கி அவர் இருக்கும் இடத்திற்கு கொண்டு கொடுக்கிறார். கள்ள சந்தையில் இட்லிகள் விலை போய்விடகூடாது என்பதற்காக இந்த உணவகங்களில் "பார்சல்" வசதி தடை செய்யப்பட்டு
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
சேவை வரி விதிப்புக்கு எதிர்ப்பு தமிழகத்தில் 50 ஆயிரம் ஓட்டல்கள் இன்று மூடல் குளிர்சாதன வசதி கொண்ட உணவகங்கள் 12.36 சதவீதம் சேவை வரியை செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநில அரசுக்கு ஏற்கனவே வாட் வரி செலுத்தி வருவதால் சேவை வரி விதித்துள்ளது கண்டனத்துக்குரியது என ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். சேவை வரியால் உணவு பண்டங்களின் விலை உயர்ந்து, நடுத்தர மக்களின் வர்த்தகத்தை இழக்க நேரிடும். எனவே, சேவை வரியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேவை வரியை ரத்து செய்யக்கோரி இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டல்கள் அனைத்தும் மூடப்படும் என்று ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் இன்று ஏசி வசதியுள்ள மற்றும் ஏசி வசதி இல்லாத சுமார் 50,000 ஓட்டல்கள் மூடப்பட்டிருக்கும். சென்னையில் மட்டும் 15,000 ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளது.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
நுங்கின் வைட்டமின் பி, சி சத்துக்கள் கோடை காலத்தில் உடலுக்கு குளுமை தரக்கூடியதில் நுங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் கால்சியல், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ளக்ஸ், தையாமின், ரிபோஃப்ளோவின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. ஒருசிலர் மேல்தோல் துவர்ப்பாக இருக்கிறது என்பதற்காக அதனை நீக்கிவிட்டு வெறும் சதையை மட்டுமே சாப்பிடுவார்கள். இதனால் சத்துக்கள் முழுமையாக கிடைக்க வாய்ப்பில்லை. சிறு குழந்தைகளுக்கு ஜீரணமாக நேரமாகும் என்பதால் நசுக்கிக் கொடுக்கவேண்டும். முற்றிய நுங்கு, பெரியவர்களுக்கே ஜீரணமாகாது எனவே இளம் நுங்கே உண்பதற்கு ஏற்றது. அம்மை நோயால் அவதிப்படுபவர்கள் இளம் நுங்கை சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி ஏற்படும். குடலில் உள்ள சிறு புண்களையும் ஆற்றும். பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் சுவை மிகுந்தது. பனை மட்டையில் பதநீர் ஊற்றி இதனுடன் நுங்கை எடுத்துப்போட்டு குடித்தால் அதன் ருசியே தனிதான். எப்படிப்பட்ட கோடை வெப்பத்திலும் இந்த பானம் தாகத்தை தீர்க்கும் குடலுக்கும், உடலுக்கும் குளிர்ச்சியை ஏற்படுத்தும். கோடையில் வேர்குரு தொல்லையினால் அவதிப்படுபவர்கள் நுங்கை தொடர்ந்து சாப்பி
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
மே.5.ம் தேதி சுடர் பயணம் தொடக்கம் இலங்கை இனப்படுகொலையை நடத்திய ராஜபக்ஷே மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக மாணவர்கள் போரட்டம் மீண்டும் தொடங்குகிறது. தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் 8 கோடி தமிழர்களை சந்திக்கும் வகையில் 5 பகுதிகளில் இருந்து மாணவர்கள் சுடரினை ஏந்திவரும் மே 12ம் தேதி அன்று காலை புறப்படுகின்றனர்.நீலகிரியில் ஒரு குழு புறப்பட்டு கோவை,திருப்பூர்,ஈரோடு,சேலம்,நாமக்கல்,திருச்சி.வழியாக தஞ்சையை அடைகிறது,கன்னியா குமரியில் தொடங்கி நெல்லை,தூத்துக்குடி,ராமநாதபுரம்,சிவகங்கைபுதுக்கோட்டை,வழியாக தஞ்சையை அடைகிறது,விருதுநகரில் தொடங்கும் குழு தேனி,மதுரை,திண்டுக்கல்,கரூர்,திருச்சி வழியாக தஞ்சையை அடைகிறது,சென்னையில் தொடங்கும் ஊர்வலம்திருவள்ளூர்.காஞ்சி,விழுப்புரம்,புதுச்சேரி,கடலூர்,நாகப்பட்டினம்,திருவாரூர் வழியாக தஞ்சையை அடைகிறது.தர்மபுரியில் தொடங்கி கிருஷ்ணகிரி.வேலூர்.திருவண்ணாமலை.பெரம்பலூர்.அரியலூர்.வழியாக தஞ்சைக்கு வருகிறது. தமிழகத்தின் முக்கிய பகுதிகளான இந்த 5 பகுதிகளில் இருந்து மாணவர்கள் சுடரினை ஏந்தி புறப்படுகின்றனர்.மேலும் மாணவ போராளிகளின் இந்த சுடர் பயணம் 17ம் தேதி அன்று த