சேவை வரி விதிப்புக்கு எதிர்ப்பு தமிழகத்தில் 50 ஆயிரம் ஓட்டல்கள் இன்று மூடல்

குளிர்சாதன வசதி கொண்ட உணவகங்கள் 12.36 சதவீதம் சேவை வரியை செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநில அரசுக்கு ஏற்கனவே வாட் வரி செலுத்தி வருவதால் சேவை வரி விதித்துள்ளது கண்டனத்துக்குரியது என ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். சேவை வரியால் உணவு பண்டங்களின் விலை உயர்ந்து, நடுத்தர மக்களின் வர்த்தகத்தை இழக்க நேரிடும்.

எனவே, சேவை வரியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேவை வரியை ரத்து செய்யக்கோரி இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டல்கள் அனைத்தும் மூடப்படும் என்று ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் இன்று ஏசி வசதியுள்ள மற்றும் ஏசி வசதி இல்லாத சுமார் 50,000 ஓட்டல்கள் மூடப்பட்டிருக்கும். சென்னையில் மட்டும் 15,000 ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளது.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்