மே.5.ம் தேதி சுடர் பயணம் தொடக்கம்


இலங்கை இனப்படுகொலையை நடத்திய ராஜபக்ஷே மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக மாணவர்கள் போரட்டம் மீண்டும் தொடங்குகிறது.

தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் 8 கோடி தமிழர்களை சந்திக்கும் வகையில் 5 பகுதிகளில் இருந்து மாணவர்கள் சுடரினை ஏந்திவரும் மே 12ம் தேதி  அன்று காலை புறப்படுகின்றனர்.நீலகிரியில் ஒரு குழு புறப்பட்டு கோவை,திருப்பூர்,ஈரோடு,சேலம்,நாமக்கல்,திருச்சி.வழியாக தஞ்சையை அடைகிறது,கன்னியா குமரியில் தொடங்கி  நெல்லை,தூத்துக்குடி,ராமநாதபுரம்,சிவகங்கைபுதுக்கோட்டை,வழியாக தஞ்சையை அடைகிறது,விருதுநகரில் தொடங்கும் குழு தேனி,மதுரை,திண்டுக்கல்,கரூர்,திருச்சி வழியாக தஞ்சையை அடைகிறது,சென்னையில் தொடங்கும் ஊர்வலம்திருவள்ளூர்.காஞ்சி,விழுப்புரம்,புதுச்சேரி,கடலூர்,நாகப்பட்டினம்,திருவாரூர் வழியாக தஞ்சையை அடைகிறது.தர்மபுரியில் தொடங்கி கிருஷ்ணகிரி.வேலூர்.திருவண்ணாமலை.பெரம்பலூர்.அரியலூர்.வழியாக தஞ்சைக்கு வருகிறது. தமிழகத்தின் முக்கிய பகுதிகளான இந்த 5 பகுதிகளில் இருந்து மாணவர்கள் சுடரினை ஏந்தி புறப்படுகின்றனர்.மேலும் மாணவ போராளிகளின் இந்த சுடர் பயணம் 17ம் தேதி அன்று தஞ்சை "முள்ளிவாய்க்கால் முற்றத்தில் "முடிவடைகிறது.அவர்களுக்கு தமிழகம் முழுவதும் உள்ள உணர்வாளர்கள்,பொதுமக்கள் ,வணிகர்கள் உள்ளிட்ட தமிழர்கள் ஆதரவு அமைப்புக்கள் அனைவரும் திரளான வரவேற்ப்பு வழங்கிட வேண்டும் என்று தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்