நவீன தொழில் நுட்பத்தில் இடம் பிடிக்கும் "தமிழ் மொழி"

எங்கும் எதிலும் மிகத் தீவிரமாக இந்தியை திணிக்கும் இந்தி அரசின் செயல் திட்டத்தை முறியடித்து தமிழ் மொழியை நவீன தொழில் நுட்பத்தில் புகுத்தி உள்ளனர் தமிழர்கள். ஏற்கனவே முகநூல், கூகிள், அலைபேசி, இணைய செயலிகளில் இந்தியின் ஆதிக்கம் இருக்கும்படி இந்தியை கட்டாயமாக திணித்து வருகிறது இந்தி அரசு. இந்திய மொழி என்றாலே அது இந்தி தான் என்று கூறும் அளவிற்கு எல்லா நிறுவங்களையும் இந்தியை பயன்படுத்த அழுத்தம் கொடுத்து வருகிறது இந்தி அரசு. இதனால் பிற இந்திய மொழிகளை எல்லாம் உலக நிறுவனங்கள், உள்நாட்டு நிறுவனங்கள் புறக்கணிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
இப்படியான நிலையிலும் தமிழ் மொழியை புதிய தொழில் நுட்பத்தில் இணைத்து தங்கள் மொழி உரிமையை, மொழியின் தேவையை நிலையாட்டி உள்ளனர் தமிழர்கள். அதற்கு நிக்கான் ஒளிப்பட நிறுவனம் ஆதரவு வழங்கி உள்ளது பாராட்டுக்குரியது. ஆம், புதிய DSLR ஒளிப்பட கருவியில் தமிழ் மொழியில் பட்டியல் மற்றும் அமைப்புகளை உருவாக்கி தொழில் நுட்பத்தில் தமிழுக்கு இடம் கொடுத்துள்ளது நிக்கான் நிறுவனம். உலக தொழில் நுட்ப சந்தையில் தமிழ் மொழிக்கு இடம் கிடைத்தது தமிழர்களுக்கு பெருமையே. இனி வரவிருக்கும் எல்லா தொழில் நுட்பங்களிலும் தமிழை நாம் உட்புகுத்த வேண்டும்.என்பது நமது அனைவரின் கடமையாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்