செங்கோட்டை-புனலூர் இடையே நடைபெறும் அகல ரயில் பாதை பணிகளுக்காக பழமையான 13 தூண் பாலத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பாதுகாப்பு குழுசார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.

தென்னக ரயில்வேயில் இயற்கை எழில் நிறைந்த ரயில் பாதைகளில் செங்கோட்டை-கொல்லம் ரயில் பாதை பிரதானமானது. சிறியதும், நீ்ண்டதுமான குகைகள், ராட்சத உயரம் கொண்ட பாலங்கள் ஆகியவைஇந்த வழித்தடத்தில் உள்ளன. தற்போது கொல்லம் முதல் புனலுர் வரையிலான ரயில் பாதை மீட்டர்கேஜ் பாதையை அகல பாதையாக மாற்றும் பணி முடிவடைந்து விட்ட நிலபையில் புனலூர் முதல் செங்கோட்டை வரை அகல பாதையாக மாற்றும் பணி நடந்து வருகிறது.

இதில் கழுதுருட்டிக்கும், தென்மலைக்கும் இடையில் கொல்லம்-திருமங்கலம் தேசியநெடுஞ்சாலைக்கு இணையாக அமைந்துள்ள 13 தூண் வளைவுகளை கொண்டு 108 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட உயரமான ரயில்வே பாலம் அந்த பகுதிக்குவரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துவருகிறது. 100 ஆண்டுகள்கடந்த பாலம்என்பதாலும், இதனை புரதான சின்னமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் மீட்டர் கேஜ் பாதையை அகல  ரயில் பாதையாக மாற்றும் பணியின் ஒரு பகுதியாக 13 கண் பாலத்தில் உள்ள தூண்களை மட்டும் இடித்து விட்டு பாலத்தைசீரமைக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.இதனை கண்டித்து அக் 2ம்தேதி கேரளாவை சேர்ந்த காங், மார்கிசிஸ்ட், பிஜேபி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் தென்மலை முதல் செங்கோடடை வரை சுமார் 25கிமீ தூரத்திற்கு நடைபயணம் போராட்டம் நடத்தினர். மேலும் பாலத்தை பாதுகாக்க வலியுறுத்தி அவ்வழியாக சுற்றுலா சென்றவர்களிடம் பாதுகாப்பு குழுவினர் கையெழுத்து பெற்றனர்.


கருத்துகள்

  1. செய்தியில் குறிப்பிடுவது எஸ். வளைவுப் பாலம் என்றே கருதலாம். தற்போதைய நிலை என்ன ? போராட்டம் வெற்ரி பெற்றதா?

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்