சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு விழா நடந்து வருகிறது. இதில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் அங்கு குவிந்து வருகிறார்கள். விரதம்இருந்து இருமுடி கட்டு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில்  சபரிமலையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் மற்றும் அரவணை, அப்பம் போன்றவை சுகாதாரமாகவும், சுத்தமாகவும் வழங்க வேண்டும் என கேரள உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். மேலும் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சபரிமலையில் தரமற்ற அரிசியில் செய்யப்ப்ட அப்பம் மற்றும் பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக உணவுத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.

இதை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அனுக்குமார் தலைமையிலான அதிகாரிகள் சபரிமலை, பம்பை பகுதிகளில் சோதனை நடத்தினார்கள். அங்குள்ள உணவு விடுதி, கடைகளில் கடந்த 3 நாட்களாக இந்த அதிரடி சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனையின் போது தரமற்ற அரிசியில் தயார் செய்யப்பட்ட 1 லட்சம்அப்பம் பாக்கெட்டு்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவற்றை பிளாஸ்டிக் கவரில் அடைத்து வைத்து விற்பனை செய்ததும் தெரிய வந்தது. அவற்றை விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்