செங்கோட்டை முதல் புனலூர் வரையிலான அகல பாதை அமைக்கும் பணி 2010ம ஆண்டு துவங்கி பல்வேறு கட்டங்களாக பிரி்க்கப்பட்டு வேலை நடைபெற்று வருகின்றன. 120க்கும் மேற்பட்ட சிறிய பாலங்களும், 5க்கும் மேற்பட்ட பெரிய பாலங்களின் வேலைகளும நடைபெற்று வருகின்றன. சுமார் 4.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு 5 பகுதிகளில் மலை குகைகள் உள்ளன. கேரள பகுதியில் 4 சிறிய குகைகளும், தமிழக பகுதியில் 1 பெரியகுகையும் உள்ளது. இவற்றில் கடின பாறைகள் கொண்ட 3குகைகளை அகலப்படுத்தும் பணி நிறைவுபெற்று விட்டது. 5வது குகையை அகலப்படுத்தும் பணி ஓரிரு வாரங்களில் தொடங்கி விடும் என்று இதன் பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ரூபாய் 355 கோடி செலவில் நடைபெற்று வரும் இப்பணியில் இரும்பு பாதை, மலைக்குகைகளை அகல்படுத்துதல், சமதளத்தை விரிவுப்படுத்துதல் என பிரிக்கப்பட்டுள்ளன. சுமார் 12 கோடி ரூபாய் செலவில் 5 குகைகளையும் அகலப்படுத்தும்பணி தற்போது விரைவுப்படுத்தப்பட்டுள்ளது.தமிழக எல்லையில் அமைந்துள்ள குகையின் முன்பக்கம் செயற்கைகுகை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. 1000 மீட்டர் நீளம்கொண்ட இந்த குகையே இப்பகுதியில் அமைந்துள்ள குகையில் மிக நீள குகையாகும். இதன் முகப்பு பகுதி நொறுங்கும் தன்மை கொண்ட பாறையாக உள்ளதால் ஒரு பக்கத்தில் உடைக்கும் போது மறுபக்கத்தில் பாறைகள் தானாக சரிந்து விடுவதாகவும் இதனால் இந்த குகையை அகலப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்படுவதாகவும், மழையின் காரணமாகவும், மண் சரிவு ஏற்படுவதாகவும் கூறப்பபடுகிறது.

மேலும் இந்த மலை குகைகளில் முன்பக்கத்தில் 50 மீட்டர் தூரத்திற்கு செயற்கையாக குகை அமைக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது. செயற்கை குகைக்கான கம்பிகள்கட்டும் பணி 50 விழுக்காடு முடிவடைந்த நிலையில் நேற்று முதல் கான்கீரிடால் அதனை மூடும் பணி தொடங்கியுள்ளது. 5.20 மீட்டர் உள்ளளவும், 6.90 மீட்டர் உயரமும் கொண்டதாக இந்த செயற்கைகுகை தயாராகி வருகிறது. இதற்காக பெரிய அளவிலான இரும்பு கம்பிகளை வளைக்கும் பணி ஒரு புறமும், ஏற்கனவே தயாராக நிறுத்தப்பட்டுள்ள கம்பிகள் மேல் பகுதியில் கான்கீரிட் அமைக்கும் பணி மறுபுறமுமாக நடைபெற்று வருகிறது. 80க்கும் மேற்பட்ட வடநாட்டு தொழிலாளர்கள் மற்றும் இன்ஜினியர்களின் மேற்பார்வையில் நடைபெற்று வரும் இந்த பணியை 5 மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று ரயில்வே உத்திரவால் பணிகள் வேகத்துடன் செயல்பட்டுவருவதாக இதன் பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

1000 மீட்டர் நீளம்கொண்ட இந்த குகையின் 60 சதவீத விழுக்காடு வேலை நிறைவு பெற்று விட்டதாக தெரிவிக்கும் இன்ஜினியர்கள் 6-00 மீட்டர் நீளத்திற்கு பாறைகளை உடைத்து போட்டிருப்பதாகவும், முன் பக்கம் செயற்கை குகை அமைத்தால் மட்டுமே 600 மீட்டர் தூரத்திற்கு உடைத்து போட்டிருக்கும் பாறை துகள்களை அள்ள முடியும் என்று தெரிவிக்கின்றனர். அதனால் வேலையை திட்ட மிட்டபடி முடிக்க இயலவில்லை என்றும் தெரிவிக்கின்றனர். மேலும் முகப்பில் 50 மீட்டர் செயற்கை குகை வேலை முடிவு பெற்றால் மீதமுள்ள பணிகள் விரைவில் முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே புனலுர் முதல் கொல்லம் வரை அகல ரயில் பாதையில் பயணிகள் ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இத்தடத்தில் கூடுதல் ரயில்களை இயக்கவும் அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தி சென்றனர். புனலூர் முதல் செங்கோட்டை வரை உள்ள பாதைகளை விரைவுபடுத்தி முடித்தால் அதிக ரயில்கள் கேரளாவிலிருந்து செங்கோட்டை வழியாக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும்  நிலை உருவாகும் என்பது  உண்மை.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்