தென்காசி சுற்றுப்பகுதியில் மழை:அருவிகளில் தண்ணீர்வரத்து

தென்காசி:தென்காசி மற்றும் சுற்றுப்பகுதியில் நேற்று மாலை 2வது நாளாக மழை



பெய்ததால் அருவிகளில் தண்ணீர் வரத்துதொடங்கியுள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வறுத்தெடுத்ததால் பகல் நேரங்களில் மக்கள்
நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி அக்னி
நட்சத்திரம் துவங்கியது. துவக்க நாளான்று தென்காசி மற்றும்
சுற்றுப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மக்கள் வெளியில்
நடமாட அஞ்சினர். அக்னி நட்சத்திரம் துவங்கிய மறுநாள் காலையில் வெயிலின்
தாக்கம் அதிகரித்த போதிலும், மாலையில் இடி, மின்னலுடன் கோடை மழை பெய்தது.
இதனால் தாழ்வான பகுதியில் மழைர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
திடீர் கோடை மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதற்கிடையே
தென்காசி மற்றும் சுற்றுப்பகுதியில் நேற்று மாலை 2வது நாளாக மழை
பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோடை மழை தொடர்ந்து நீடிக்கும்
பட்சத்தில் தென்காசி பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு
ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.மழையின் காரணமாக
குற்றால மெயின் அருவி,ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து
ஏற்ப்பட்டுள்ளது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்