மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி- மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி-கே.செல்லப்பெருமாள்- இயற்கை இறைவனால் படைக்கப்பட்ட களஞ்சியம். இயற்கையை பாடும் புலவர்கள் நாடு, நகர், மலை, மரம், செடி, கொடி, ஆறு என அனைத்தையும் பாடுகின்றனர். வரலாற்றை வளம் பெறச்செய்த குற்றாலம் வண்டமிழ் புலவர்களை வியப்படைய செய்து பல்வேறு இலக்கியங்களை படைக்க தூண்டியது.நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானசம்பந்தர் முதல் குறவஞ்சியால் பெரும்புகழ் பெற்ற திரிகூடராசப்பக் கவிராயர் வரை குற்றாலத்தின் இயற்கையழகை பாடியுள்ளனர். அத்தகைய வகையில் படைக்கப்பட்ட இலக்கியங்களுள் தலைசிறந்ததாய் தலச்சிறப்பையும் உணர்த்தக்கூடியது திருக்குற்றால கோவை ஆகும்.பாண்டிய மன்னர்களுக்கு பெருமை சேர்த்த 14 நகரங்களுள் ஒன்று குற்றாலம். அம்மன்னர்கள் தம் பெயரோடு இணைத்து கொண்ட நகர்கள் ஐந்து. அவற்றுள் ஒன்று பொதிகை. பொதிகை வெற்பன், பொதிகை பொருப்பன் என சூடாமணி நிகண்டிலும், திவாகர் நிகண்டிலும் கூறப்பட்டிருப்பதை காண முடிகிறது. பொற்கோட்டு இதயமும், பொதியமும் போன்று வாழ்க என்பது புறநானுற்று பாடல் வரிகள்.வரை என்ற சொல் மலை எனும் பொருள் தரும். திரிகூடமலை என்பதால் திரிகூட ...
இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்
வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டை-கொல்லம் ரயில் பாதை
வரலாற்று சிறப்பு மிக்க ரயில் பாதைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது செங்கோட்டை-கொல்லம் ரயில் பாதையாகும். 1873ம் ஆண்டு அப்போதைய ஆங்கிலேய அரசால் தொடங்கப்பட்ட செங்கோட்டை-கொல்லம் ரயில் பாதை பணிகள் 27 ஆண்டுகள் நடைபெற்றது. இப்பாதையை அமைத்திட தென்னிந்திய ரயில்வே கம்பெனி ரூ.17 லட்ச ரூபாயும் , திருவாங்கூர் நிர்வாகம் ரூ.7 லட்ச ரூபாயும் , அப்போதைய திருவாங்கூர் திவான் ராமய்யர் ரூ.6 லட்சம் ஆக ரூ.30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இப்பணிகள் தொடங்கப்பட்டு 1901ம் ஆண்டு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 1902ம் ஆண்டு முதல் சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. 1901ம் ஆண்டு கொச்சி துறைமுகத்திற்கு கப்பல் வழியே ரயி்ல் பெட்டிகள் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து மாட்டு வண்டிகளில் பொருட்களை ஏற்றி கொல்லம் கொண்டு வரப்பட்டு முதல் பயணிகள் ரயில் போக்குவரத்து 1904ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி கொல்லம் ரயில் நிலையத்தில் வைத்து 21 குண்டுகள் முழங்கிட அங்குள்ள ரயில் நிலைய மேலாளர் ராமைய்யா என்பவர் முதல் பயணிகள் ரயிலை கொல்லத்தில் இருந்து செங்கோட்டைக்கு கொடியசைத்து துவங்கி வைத்தார். ரயிலி...
கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...
கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...தினம் தினம் பல பாடம்களை நாம் படித்தும் கேட்டும் வருகிறோம் ..நமக்கு தெரிந்ததை அனைவருக்கும் கற்றுகொடுப்போம் ..வாருங்கள் நல்ல நாளைய சமுதாயத்தை உருவாக்குவோம்.... நண்பர்களே..அன்பு நண்பருக்கு ஒரு வேண்டுகோள்...இன்னும் பல பேர் ஆங்கிலத்தை அப்படியே டைப் செய்து வெளியிடுகிறீர்கள்.. ஆக உங்களுக்கு தமிழ் மொழியை முக நூலில் மற்றும் இணையத்தில் கையாள தமிழ் மொழியறிவு தேவை படுகிறது.. இதோ உங்களுக்கான சரியான தெரிவு... நல்ல விஷயத்தை நாம் அனைவருக்கும் தெரியும் வண்ணம் ஏன்நம்ம தாய் மொழியான தமிழ் இல் பகிர்ந்து கொள்ள கூடாது.. நீங்கள் உங்களது post இல் இந்த http://www.google.co.in/transliterate/indic/tamil மற்றும் http://tamil.changathi.com/ ஆகிய url ஐ பயன்படுத்த கூடாது..நாங்கள் அனுபவிக்கும் இந்த தமிழின் இனிமையை ஏன் நீங்களும் முயற்சிக்க கூடாது....எனக்கு என்னமோ நீங்கள் முயற்சி செய்தால் இதை வெற்றி பெற செய்யலாம் என்று கருதுகிறேன்.....யோசியுங்கள் தோழர்களே...நம்ம தாய் மொழியை இனிதவறாது பயன் படுத்துவோம் . Type in Tamil - Google Transliteration....www.google.co.in நே...
கருத்துகள்
கருத்துரையிடுக