இடுகைகள்

2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
படம்
தந்தையர் தினம் ...................... உங்கள் மரணம் ..............எங்களுக்கு நிரந்தர சோகம் ................ உங்கள் அன்பு ..............அரவணைப்பு. நல்லதையே.............சொல்லும் .....மனம்........... அடுத்தவர்களின் .............. பொருட்களுக்கு ஆசை ................வைக்காமல் சொந்த நிழலில் .................எங்களை நிற்க வைத்து..... எங்களோடு நிழலாய் நெஞ்சம் நிறைந்து  .............. வாழும்............. எங்களின் .............பல்கலைக் கழகமே .......... உங்கள் வழியில் ..........நாங்களும் ..............
படம்
எங்கள் ஊருபேருந்து நிலையம்  நுழையும்போதே .................... தென்றல்காற்று  தாலாட்டும் ................ சாரல் மலை பொழியும் ........... புனித .....பூமி ................
படம்
வந்தாரை வாழவைக்கும் ........... எங்கள் மண் ................ ஊருக்குள் நுழையும்போதே .................... தென்றல்காற்று  தாலாட்டும் ................புனித .....பூமி ................
படம்
இந்த கொடுமைக்கு தீர்வு என்ன...........? கட்டிய கணவனை இழந்து ......... பெற்ற குழந்தையை .........இழந்து........... துடிக்கும் ...............இவரின்............ கண்ணீருக்கு .........பதில் சொல்லுவது................யார்...?
படம்
செங்கோட்டை எஸ் எம் எஸ் எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8முதல் 18 வயது வரையுள்ள மாணவர்களுக்கு கூடைப் பந்து பயிற்சியினை செங்கோட்டை கிருஷ்ண முரளி தொடங்கி  வைத்த போது எடுத்த படம்.
படம்
அறிவாய் ............. ஆற்றலாய்  அனைத்துமாய் ............. என்னை வழிநடத்தும் ................ திருவடிகளுக்கு.............. சமர்ப்பணம்.
படம்
கோடை வெயில் கொடுமையிலிருந்து ............... உள்ளமும்.............உடலும்..............குளிர.............. நீர்மோர் ........பந்தல் திறப்பு.............
படம்
கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்க ................ விரைவில்................. தரமான ..............தாராளமான ............. தகவல்களோடு .......................... வருகிறது....................
உங்கள் தொகுதி எம்.எல்.ஏ.வை இமெயிலில் தொடர்பு கொள்ளுங்கள் .................. நெல்லை: தமிழகத்தின் தலை எழுத்தை மாற்றிய மஹா ஜனங்களே ........... உங்கள் தொகுதி எம் எல் ஏ விடம் நேரில் புகார் மனு  அளிக்க முடியவில்லையா...........? நீங்கள் அவரிடம் புகார் அளிக்க வேண்டுமா.... ? இதோ தமிழக அரசு அவர்களுக்கு வழங்கிய ஈ மெயில் முகவரி.........இதில் அவர்களை தொடர்பு கொள்ளுங்கள் ... ஒட்டு போட்டப்போ பார்த்தது நம்ம எம்.எல்.ஏ வை  இனிமே அடுத்த தேர்தல்ல தான்  பார்க்கலாம் என வருத்தப்படத் தேவை இல்லை அப்படி நினப்பவர்களே, ஒவ்வொரு தொகுதி எம் எல் ஏக்கும் ஒரு ஈ மெயில் ஐடி கொடுக்கப்பட்டுள்ளது. இனிமேல் உங்கள் " நியாமான " கோரிக்கைகளை நீங்கள் அனுப்பலாம். பதில் வருமா வராதான்னு கவலைப்படாதீர்கள்.அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஈ மெயில் ஐடி யில் இருக்கும் தகவல்கள் அணைத்தும் உரியவர்களிடம் சேர்க்கப்பட்டு பதில் கிடைக்க வாய்ப்பு உள்ளது.ஆகவே கவலைப்படாமல் புகார்மனுக்களை இமெயில் மூலம் அனுப்பி பதிவு செய்யுங்கள்.எல்லா எம் எல் ஏக்கும் லேப் டாப் கொடுக்கப்பட்டுள்ளது அதனால் கண்டிப்பாக பதில் கிடைக்கும் என நம்புவ
படம்
தென்காசி சுற்றுப்பகுதியில் மழை:அருவிகளில் தண்ணீர்வரத்து தென்காசி:தென்காசி மற்றும் சுற்றுப்பகுதியில் நேற்று மாலை 2வது நாளாக மழை பெய்ததால் அருவிகளில் தண்ணீர் வரத்துதொடங்கியுள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வறுத்தெடுத்ததால் பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் துவங்கியது. துவக்க நாளான்று தென்காசி மற்றும் சுற்றுப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மக்கள் வெளியில் நடமாட அஞ்சினர். அக்னி நட்சத்திரம் துவங்கிய மறுநாள் காலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்த போதிலும், மாலையில் இடி, மின்னலுடன் கோடை மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழைர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. திடீர் கோடை மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதற்கிடையே தென்காசி மற்றும் சுற்றுப்பகுதியில் நேற்று மாலை 2வது நாளாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோடை மழை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் தென்காசி பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.மழையின் காரணமா
படம்
மரம் நடுவதற்கு அனுமதியுங்கள்........................... கோவையை சார்ந்த தாய் மரம் என்ற குழுவினர் மரம் வளர்ப்பதை ஊக்குவிப்பதிற்காக ஒரு புதிய அமைப்பு ஒன்றை நிறுவி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.அதன் செயல் வடிவம் பின்வருமாறு: உங்கள் நிலத்திலோ, வீடுகளிலோ பயன்படுத்தாத உபரி இடம் இருந்தால் மரம் நடுவதற்கு அனுமதியுங்கள். மரம் நடுவதற்கு ஏற்ற இடம் உருவாக்கி கொடுக்க வேண்டும் என்பதே உங்களிடம் நாங்கள் எதிர்ப்பார்ப்பது. ப்ரணவ பீடம் அறக்கட்டளை நட்சத்திர மரங்களை இலவசமாகவே வழங்க இருக்கிறது. உங்களுக்கு மரம் நடும் ஆர்வம் இருந்தால் எங்களுடன் இணைந்து கொள்ளலாம். மற்றவை இயற்கை தானாகவே பார்த்துக்கொள்ளும். சில இயற்கை அமைப்புக்கு உகந்த நிலையில் நட்சத்திர மரக்கன்றுகளை நடுவதன் மூலம் சுற்று சூழலை தன்வசமாக்கி மரங்கள் ஆதிக்கம் செலுத்த துவங்கும். அதனால் மாசுபடுதல் குறையும் மற்றும் தாவர இனப்பெருக்கம் அதிகரிக்கும். இந்த பணியை இலவசமாகவே செய்கிறோம். மரக்கன்றுகள் இலவசம். முதல் சில வருடங்களுக்கு இலவச பராமரிப்பும் செய்கிறோம். குறைந்த பட்சம் 5 சென்ட் பயன்படுத்தாத இடம் தேவை. அதிகமாக எத்தனை பெரிய இடமாக இருந்தாலும
படம்
 அம்மா உணவகம்.        விலை மதிப்பில்லா உணவகம்...! கண்ணாடி கதவுகள் நம்மை வரவேற்க உள்ளே நுழைந்தவுடன் ஒரு டோக்கன் கவுன்ட்டர் இருக்கிறது. ஒரு இட்லி ஒரு ரூபாய். ஒரு டோக்கன் கூட கொடுக்கப்படுகிறது. ஐந்து ரூபாய்க்கு ஐந்து டோக்கன்கள். அதன் பிறகு வரிசையில் நின்று இட்லிகளை வாங்கிகொள்ளலாம். டைல்ஸ் பதிக்கப்பட்ட பளீர் அறை. காற்றோட்டமாகவும். மின் விசிறிகள், ஈக்களை விரட்டும் ஈ விரட்டி இயந்திரம்.....நின்று கொண்டு சாப்பிட ஏதுவாக வட்ட வடிவிலான டைனிங் டேபிள்கள், உணவு கொடுக்கும் தட்டுகள் கூட சுத்தமாக துலக்கப்பட்டுள்ளன. பணிபுரியும் பணியாளர்கள் சுத்தமான ஆடைகள் உடுத்தி...உணவு சமைக்கும், பரிமாறும் பெண்கள் தலையில் "கவர்" அணிந்து இருக்கிறார்கள்.... கைகளில் க்ளவுஸ் அணிந்தே பணிபுரிகிறார்கள். இட்லிக்கு சாம்பார் மட்டும் தரப்படுகிறது. மாற்று திறனாளி ஒருவருக்கு, அவர் வரிசையில் நிற்க முடியாது என்பதால் டோக்கன் அளிக்கும் பெண்மணியே உணவை வாங்கி அவர் இருக்கும் இடத்திற்கு கொண்டு கொடுக்கிறார். கள்ள சந்தையில் இட்லிகள் விலை போய்விடகூடாது என்பதற்காக இந்த உணவகங்களில் "பார்சல்" வசதி தடை செய்யப்பட்டு
சேவை வரி விதிப்புக்கு எதிர்ப்பு தமிழகத்தில் 50 ஆயிரம் ஓட்டல்கள் இன்று மூடல் குளிர்சாதன வசதி கொண்ட உணவகங்கள் 12.36 சதவீதம் சேவை வரியை செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநில அரசுக்கு ஏற்கனவே வாட் வரி செலுத்தி வருவதால் சேவை வரி விதித்துள்ளது கண்டனத்துக்குரியது என ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். சேவை வரியால் உணவு பண்டங்களின் விலை உயர்ந்து, நடுத்தர மக்களின் வர்த்தகத்தை இழக்க நேரிடும். எனவே, சேவை வரியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேவை வரியை ரத்து செய்யக்கோரி இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டல்கள் அனைத்தும் மூடப்படும் என்று ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் இன்று ஏசி வசதியுள்ள மற்றும் ஏசி வசதி இல்லாத சுமார் 50,000 ஓட்டல்கள் மூடப்பட்டிருக்கும். சென்னையில் மட்டும் 15,000 ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளது.
படம்
நுங்கின் வைட்டமின் பி, சி சத்துக்கள் கோடை காலத்தில் உடலுக்கு குளுமை தரக்கூடியதில் நுங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் கால்சியல், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ளக்ஸ், தையாமின், ரிபோஃப்ளோவின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. ஒருசிலர் மேல்தோல் துவர்ப்பாக இருக்கிறது என்பதற்காக அதனை நீக்கிவிட்டு வெறும் சதையை மட்டுமே சாப்பிடுவார்கள். இதனால் சத்துக்கள் முழுமையாக கிடைக்க வாய்ப்பில்லை. சிறு குழந்தைகளுக்கு ஜீரணமாக நேரமாகும் என்பதால் நசுக்கிக் கொடுக்கவேண்டும். முற்றிய நுங்கு, பெரியவர்களுக்கே ஜீரணமாகாது எனவே இளம் நுங்கே உண்பதற்கு ஏற்றது. அம்மை நோயால் அவதிப்படுபவர்கள் இளம் நுங்கை சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி ஏற்படும். குடலில் உள்ள சிறு புண்களையும் ஆற்றும். பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் சுவை மிகுந்தது. பனை மட்டையில் பதநீர் ஊற்றி இதனுடன் நுங்கை எடுத்துப்போட்டு குடித்தால் அதன் ருசியே தனிதான். எப்படிப்பட்ட கோடை வெப்பத்திலும் இந்த பானம் தாகத்தை தீர்க்கும் குடலுக்கும், உடலுக்கும் குளிர்ச்சியை ஏற்படுத்தும். கோடையில் வேர்குரு தொல்லையினால் அவதிப்படுபவர்கள் நுங்கை தொடர்ந்து சாப்பி
படம்
மே.5.ம் தேதி சுடர் பயணம் தொடக்கம் இலங்கை இனப்படுகொலையை நடத்திய ராஜபக்ஷே மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக மாணவர்கள் போரட்டம் மீண்டும் தொடங்குகிறது. தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் 8 கோடி தமிழர்களை சந்திக்கும் வகையில் 5 பகுதிகளில் இருந்து மாணவர்கள் சுடரினை ஏந்திவரும் மே 12ம் தேதி  அன்று காலை புறப்படுகின்றனர்.நீலகிரியில் ஒரு குழு புறப்பட்டு கோவை,திருப்பூர்,ஈரோடு,சேலம்,நாமக்கல்,திருச்சி.வழியாக தஞ்சையை அடைகிறது,கன்னியா குமரியில் தொடங்கி  நெல்லை,தூத்துக்குடி,ராமநாதபுரம்,சிவகங்கைபுதுக்கோட்டை,வழியாக தஞ்சையை அடைகிறது,விருதுநகரில் தொடங்கும் குழு தேனி,மதுரை,திண்டுக்கல்,கரூர்,திருச்சி வழியாக தஞ்சையை அடைகிறது,சென்னையில் தொடங்கும் ஊர்வலம்திருவள்ளூர்.காஞ்சி,விழுப்புரம்,புதுச்சேரி,கடலூர்,நாகப்பட்டினம்,திருவாரூர் வழியாக தஞ்சையை அடைகிறது.தர்மபுரியில் தொடங்கி கிருஷ்ணகிரி.வேலூர்.திருவண்ணாமலை.பெரம்பலூர்.அரியலூர்.வழியாக தஞ்சைக்கு வருகிறது. தமிழகத்தின் முக்கிய பகுதிகளான இந்த 5 பகுதிகளில் இருந்து மாணவர்கள் சுடரினை ஏந்தி புறப்படுகின்றனர்.மேலும் மாணவ போராளிகளின் இந்த சுடர் பயணம் 17ம் தேதி அன்று த
மாணவர்களேடு கை கோர்த்த ஆட்டோ ஓட்டுனர் ............... மதுரையில் நடந்த மாணவர் போராட்டத்தின்போது ஒரு ஆட்டோ டிரைவர் அனைவரையும் கவர்ந்திழுத்தார். மிகத்தீவிரமாக தமிழ் ஈழத்தை ஆதரித்தும், இலங்கையைக் கண்டித்தும் கோஷம் எழுப்பிய அவர் பேசிய பேச்சுதான் அட்டகாசமானது. அவரது பெயர் நாகராஜ். பெரியார் பேருந்து நிலையத்திற்கு சவாரி வந்தவர். வந்த இடத்தில் நடந்த தமிழ் ஈழ ஆதரவு போராட்டத்தைப் பார்த்து அதில் இணைந்து கொண்டார். சுமார் 5 மணி நேரம் போராட்டத்தில் அவர் பங்கேற்றார். அப்போது அவர் திரண்டிருந்த மாணவர்களிடம் தனது ஆட்டோ மீது ஏறியபடி பேசுகையில், தம்பிகளா இத்தனை வருஷமா மனசுக்குள்ள வச்சிக்கிட்டு குமுறிகிட்டு இருந்தேன்பா..... நீங்கல்லாம் போராட ஆரம்பிச்சதுக்கு அப்புறம் தாம்ப்பா நிம்மதியா இருக்கு. என் மகன் காலேஜுல படிக்குறான்.... போடா போய் போராடு அப்படின்னு அனுப்பிட்டேன்... இனிமேல் மதுரைல உங்க போராட்டம் நடக்கும் போது போன் போடுங்க .. நேரம் கிடைக்கும் போது கலந்துக்குறேன். எப்பாடு பட்டாவது ஈழ மக்களுக்கு நல்லது ஏதாவது நடக்க வைக்கணும்யா"என்றாரே பார்க்கலாம். நாகராஜ் தனது ஆட்டோவின் பின் புறத்தில் பிரபாகரன
படம்
சட்டசபையில் அடிதடியில் ஈடுபட்ட தேமுதிகவின் 6 எம்.எல்.ஏக்கள் ஓராண்டுக்கு சஸ்பென்ட்: சபாநாயகர் உத்தரவு!       சட்டசபையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசியதற்காக தேமுதிகவின் அதிருப்தி எம்.எல்.ஏ. தமிழழகனை மற்ற தேமுதிக எம்.எல்.ஏக்கள் தாக்க முயற்சித்தனர். இதை மற்றொரு தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன் தடுக்க முயன்றார். இதனால் அவர் கடுமையாகத் தாக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக தேமுதிக எம்.எல்.ஏக்கள் முருகேசன், அருள்செல்வன், செந்தில்குமார், பார்த்தசாரதி, நல்லதம்பி, கொறாடா சந்திரகுமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி சட்டசபையின் உரிமைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று காலை சட்டசபையில் உரிமைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தேமுதிக எம்.எல்.ஏக்கள் 6 பேரும் தமிழக சட்டசபையில் இருந்து ஓராண்டு காலத்துக்கு சஸ்பென்ட செய்யப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். இந்த ஓராண்டு காலம் எம்.எல்.ஏக்கள் என்ற தகுதியை அவர்கள் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு தேமுதிக எம்.
படம்
மனித நேயம் மரிக்கவில்லை ............. சென்னை அமைந்தகரை போக்குவரத்து பிரிவின் தலைமைக் காவலர் ரவி (38). அவர் அதிகாலை தேனாம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இருந்து வேலைக்கு பைக்கில் புறப்பட்டார். அமைந்தகரை கூவம் பாலத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, கூவத்தை எட்டிபார்த்தபடி 20க்கும் மேற்பட்டோர் நின்றிருந்தனர். இதனால் பைக்கை ஓரத்தில் நிறுத்திவிட்டு அவரும் எட்டிப் பார்த்தார். அப்போது கூவத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், நெஞ்சு பகுதி முழுவதும் மூழ்கிய படி காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கூக்குரலிட்டபடி இருந்தார். பொதுமக்கள் யாரும் காப்பாற்றவில்லை. உடனே ரவி மடமடவென கூவத்துக்குள் இறங்கினார். ஆழமாக இருந்ததால் முதியவர் பக்கத்தில் செல்ல முடியவில்லை. அங்கு கிடந்த நீளமான சவுக்கு கம்பை எடுத்து, அந்த முதியவரை பிடித்துக் கொள்ளச் சொன்னார். ஆனால் கம்பு அவருக்கு எட்டவில்லை. பின்னர், ரவி தனது ஷூவில் இருந்த கயிற்றை கழற்றி கம்போடு இணைத்து, அதை பிடித்துக் கொள்ளுமாறு முதியவரிடம் கூறினார். அவரும் அப்படியே செய்ய, அதை பிடித்து முதியவரை இழுத்து வெளியே கொண்டு வந்து காப்பாற்றினார் ரவி. முதியவ
படம்
வைகோ தலைமையில் தூத்துக்குடியில் நடைபெற்ற முற்றுகை போராட்டம் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட 750 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையினால் 40 கிலோ மீட்டர் தூரத்தில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமானோர் புற்றுநோய்க்கு ஆளாகியுள்ளனர் என்பது புகார். கடந்த சில தினங்களுக்கு முன்பு விஷவாயு பரவியதில் தூத்துக்குடி நகர் முழுவதும் ஏராளமான மக்கள் மூச்சுத்தினறல் ஏற்பட்டது. இதை மாவட்ட நிர்வாகம் மூடி மறைத்துவிட்டது என்பது பல்வேறு அரசியல் கட்சியினரின் புகாராகும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் இன்று காலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும், மீனவர்சங்கம், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தின் போது மாவட்ட ஆட்சியருக்கு எத