இடுகைகள்

செப்டம்பர், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சுதந்திரம் அடைந்து 60 ஆண்டு காலம் ஆகிவிட்டது..............

படம்
சென்னையில் நடந்த, 5வது தூண் அமைப்பின் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு புத்தகமான, மக்களாகிய நாம் வெளியீடு சென்னையில் நடந்தது. இதில் சகாயம் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். தேமுதிக எம்.எல்.ஏ. மாபோ பாண்டியராஜன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் தமிழகத்தை உலுக்கியுள்ள கிரானைட் கொள்ளையை அம்லப்படுத்தி அரசுக்கு அறிக்கை அளித்த மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் சகாயம் பேசியதாவது... நமது தேசம் எப்படிப்பட்ட தேசமாக இருந்தது. இன்று லஞ்சமும், ஊழலும் எங்கும் வியாபித்து உள்ளன. நாட்டின் முன்னேற்றத்திற்கு அவை பெரும் தடைகளாக இருக்கின்றன. ஏழைகளிடம் இரக்கம் காட்டலாம். ஆனால், தவறு செய்தவர்கள் மீது இரக்கம் காட்டவே கூடாது. தவறு செய்தவர்கள் மீது நான் கடும் நடவடிக்கை எடுத்துள்ளேன். தவறு செய்த யாரையும் விட்டுவிட மாட்டேன். நமது தேசம் சுதந்திரம் அடைந்து 60 ஆண்டு காலம் ஆகிவிட்டது. மாற்றம் வந்தாக வேண்டும். அந்த மாற்றத்தை உருவாக்கக்கூடிய சக்தி மாணவ-மாணவிகளிடமும், இளைஞர்களிடமும் இருக்கிறது. லஞ்ச, ஊழலை ஒழிக்க விரும்பும் எல்லோரும் ஒன்று சேர்ந்தால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ந

மனசை புண் படுத்தாதீர்கள் ..................

படம்
அமெரிக்காவைச் சேர்ந்த, திரைப்பட இயக்குனர், டெர்ரி ஜோன்ஸ் மற்றும் ஷாம் பேசிலி ஆகியோர் குறும்படம் எடுத்து வெளியிட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து, முஸ்லிம்கள் ஆங்காங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று முன்தினம், சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் முன் திரண்ட, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர், அங்கு உருவ பொம்மை எரிப்பு, கல்வீச்சு போன்ற செயல்களில் ஈடுபட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதால், அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த போராட்டம் தொடர்பாக, 18 பேர் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என, ராயப்பேட்டை போலீசார் தெரிவித்தனர். அமெரிக்க தூதரக முற்றுகை போராட்டம் தொடர்ந்து கொண்டே இருப்பதால், அங்கு 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜெயினுலாபுதீன் தலைமையில் 5,000க்கும் மேற்பட்டோர் திரண்டதால், தூதரகம் முன் பரபரப்பு ஏற்பட்டது.அதிபர் ஒபாமாவின் உருவ பொம்மையை எரித்தனர். போராட்டக்காரர்களிடம் போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு கலைந்து சென்றனர்

கேரளாவிற்கு வாகன போக்குவரத்து நிறுத்தம்.............

படம்
நெல்லை மாவட்டம் புளியரை வழியே கேரளாவிற்கு தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தென்காசியிலிருந்து கேரள மாநிலம் கொல்லம், திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, புனலூர், கோட்டயம், திருச்சூர் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு தமிழக மற்றும் கேரள அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. செங்கோட்டை வழியே கேரளாவிற்கு ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருப்பதால் பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்நிலையில் டீசல் விலை உயர்வை கண்டித்தும், காஸ் சிலிண்டர் வினியோகம் குறைப்பை கண்டித்தும் கேரளாவில் நேற்று எதிர்கட்சிகள் பந்த் நடத்த அழைப்பு விடுத்திருந்தது. இதனால் கேரளாவில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வாகனங்கள் ஓடவில்லை. புளியரை வழியே கேரளாவிற்கு செல்லும் வாகனங்கள் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தன. தென்காசியிலிருந்து கேரளாவின் பல்வேறு இடங்களுக்கு செல்லும் பஸ்கள் ஓடவில்லை. இதனால் தென்காசி புதிய பஸ்ஸ்டாண்டில் கேரளா செல்லும் பஸ்கள் நிறுத்தும் பிளாட்பாம் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. வாகன போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் கேரளாவிற்கு செல்லும் பயணிகள், வியாபாரிகள் பெரிதும் அவதிப்பட்டடன

தென்காசி- திருநெல்வேலி வழித்தடத்தில் புதியரெயில் செப்.21. .முதல் இயக்கம்.

படம்
தென்காசி- திருநெல்வேலி வழித்தடத்தில் புதியரெயில் செப்.21. .முதல் இயக்கம். தென்காசி திருநெல்வேலி வழித்தடத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் பயணிகள் ரயில் சேவை நிறுத்தப்பட்டு அகல ரயில் பாதை அமைக்கும் பணி ரூபாய் இருனுற்று இருபது கோடி செலவில் தொடங்கி கடந்த பிப்ரவரி மாதம்முடிந்தது .அதனை தொடர்ந்து பல்வேருகட்ட சோதனைகளும் நடத்தப்பட்டு விரைவில் ரயில்  இயக்கம் தொடங்கும் என்று தென்னக ரயில்வே அறிவித்த நிலையில் கோச் தட்டுபாடு காரணமாக ரயிலை குறிப்பிட்ட நாளில் இயக்க முடியாத நிலைக்கு தென்னக ரயில்வே தள்ளப்பட்டது .இந்நிலையில் கடந்த இரு மாதத்தில் பல அரசியல் கட்சியினர் மறியல்,ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர் .அதனை தொடர்ந்து கடந்த ஜூலை மாதத்தில் வெளியான ரயில்வே கால அட்டவணையில் தினமும் செங்கோட்டையில் இருந்து நெல்லைக்கு நான்கு முறையும்,மறு மார்க்கத்தில் நெல்லையிலிருந்து செங்கோட்டைக்கு நான்கு முறையும் ரயில் அட்டவனையை தென்னக ரயில்வே வெளியீட்டு பயனகட்டனதையும் அறிவித்தது, தற்போது வரும் செப்டம்பர் 21..முதல் தென்காசியில் இருந்து நெல்லைக்கு ரயில் சேவையை தொடங்கபடுகிறது இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந

துப்பாக்கிச் சூட்டில் பலியான மீனவர் குடும்பத்துக்கு ஜெ. ரூ. 5 லட்சம் நிதியுதவி

படம்
கூடங்குளம் அணுமின் நிலையத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார். கூடங்குளம் கடற்கரையில் தொடங்கிய வன்முறையும் போலீஸ் தாக்குதலும் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கும் பரவியுள்ளது. தூத்துக்குடியில் மீனவர் ஒருவர் போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று மாலை விடுத்துள்ள அறிக்கையில், கூடங்குளம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காது என்றும் கூடங்குளம் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மீனவர் அந்தோணிசாமியின் குடும்பத்துக்கு ரூ5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

மணப்பாடு கிராமத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் மீனவர் பலி

படம்
கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர் கிராமங்களில் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. மணப்பாடு கிராம மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றபோது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மீனவர் அந்தோணிசாமி என்பவர் பலியாகியுள்ளார். மணப்பாடு கிராம மீனவர்கள் இன்று சாலை மறியல் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு தரப்பினர் குலசேகரப்பட்டனம் காவல் நிலையத்தை முற்றுகையிட சென்றனர். இதையடுத்து அவர்களைக் கலைக்க போலீசார் துப்பாக்கிச் சூட்டில் இறங்கினர். இதில் அந்தோணி சாமி என்ற மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டில் அவரது குடல் வெளியே வந்து கோரமாக பலியானார். ஆனால் சாலை மறியலின் போது போலீஸ் சோதனைச் சாவடிக்கு அந்தோணிசாமி தீ வைக்க முயன்றதாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார் என்று போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே முற்பகலில் போலீஸ் நடத்திய தாக்குதலால் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பதற்றம் நீடித்து வன்முறை வெடித்தது. இந்த நிலையில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மீனவர் ஒருவர் பலியாகி இருப்பது பெரும் பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது.

தூத்துக்குடி- மைசூர் எக்ஸ்பிரஸ் மீது கல்வீச்சு

படம்
கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீது போலீசார் இன்று நடத்திய தாக்குதலைக் கண்டித்து தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் போராட்டம் பரவி இருக்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் யுரேனியம் நிரப்புவதை நிறுத்த வேண்டும் என்று கூடங்குளத்திம் மீனவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்தின் உச்சகட்டமாக இன்று காலை கூடங்குளம் கடற்கரை பகுதியில் கூடியிருந்தோர் மீது தடியடி மற்றும் கண்ணீர்புகை குண்டுகள் வீசப்பட்டன. இந்த செய்தி கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கும் பரவியது. தூத்துக்குடி பனிமாதா ஆலயத்தின் ஒன்று திரண்ட மீனவர்கள் தூத்துக்குடி ரயில் நிலையத்தின் முன்பு போராட்டம் நடத்தினர். அப்போது தூத்துக்குடி ரயில் நிலையத்தில் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் மீது ஒரு பிரிவினர் கல்வீசித் தாக்குதல் நடத்தினர்

கொடூர குளமாக மாறிய கூடன்குளம் ...........

படம்
கூடங்குளம் கிராமத்தில் ஆங்காங்கே தீவைப்பு- கடைகள் அடைப்பு- போலீஸார் குவிப்பு கூடங்குளம் கடற்கரைப் பகுதியில் நடந்த பெரும் கலவரத்தைத் தொடர்ந்து தற்போது கூடங்குளம் கிராமத்திலும் பதட்டம் தொற்றிக் கொண்டுள்ளது. கிராமம் முழுவதும் ஆங்காங்கே சிலர் தீவைப்பில் குதித்துள்ளனர். இதனால் பெரும் புகைமூட்டமாக உள்ளது. தடியடி நடத்தியவர்களைப் போலீஸார் அடித்துக் கலைத்து விரட்டினர். கூடங்குளம் அணு மின் நிலையம் அருகே சுனாமி காலனி கடற்கரைப் பகுதியில், கூடியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களை போலீஸார் இன்று தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் கலைத்து விரட்டினர். இந்த நிலையில் தற்போது கூடங்குளம் கிராமத்தில் பதட்டம் அதிகரித்துள்ளது. அங்கு கூடிய பொதுமக்கள் அங்கிருந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். பின்னர் ஊரைச் சுற்றிலும் ஆங்காங்கே தீவைத்தனர். இதனால் கூடங்குளத்தைச் சுற்றிலும் புகைமூட்டமாக மாறியுள்ளது. மேலும் சாலை மறியலிலும் மக்கள் குதித்தனர். ஆனால் அவர்களைப் போலீஸார் தடியடி நடத்தி விரட்டிக் கலைத்தனர். இந்தப் பதட்டத்தைத் தொடர்ந்து கூடங்குளம் கிராமத்தில் கடைகள் அனைத்தும் அடைக்க

1 ரூபாயில் ஆன்லைனில் ....வில்லங்க சான்றிதழ்......

படம்
Good News - To get your EC copies, Marriage Certificates,Certified Documents,Chit, Society Documents, Land Value Guidelines in ONLINE or HOME DELIVERY BY COURIER from Government for Rs 1 and Rs 25.  நல்ல செய்தி , பொதுவாகவே ஈஸீ( EC - Encumbrance Certificate) எனப்படும் என்கும்பரன்ஸ் சர்டிஃபிக்கட் (வில்லங்க சான்றிதழ்) கிடைக்க நிறைய பேருக்கு ஒன்று ஒரு தரகரை நாட வேண்டும் அல்லது ரிஜஸ்டர் ஆஃபிஸுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நடக்க வேண்டிய கட்டாயம். இனிமேல் 1 ரூபாயில் ஆன்லைனில் எடுத்துவிடலாம். அது போக இதை வீட்டுக்கு கொரியர் அல்லது ஸ்பீட் போஸ்ட்டில் கூட அனுப்பி வைக்க இந்த அரசாங்கம் ரெடி நீங்க ரெடியா ? ஈஸி எடுக்க 1 ரூபாய். முதல் வருடத்திற்க்கு 15 ரூபாயும் ஒவ்வொரு வருஷம் கூடுதல் ரெக்கார்ட் பெற 5 ரூபாய் , பத்து வருடத்திற்க்கு தோராயமாக 1+15+9 = 61 ரூபாய் தான் செலவு. இதை உங்கள் வீட்டுக்கே கொரியர் செய்ய ரூபாய் 25 தான் செலவு. ஆன்லைனில் நேரடியாக தேடி பிரின்ட் அவுட் செய்து கொள்ள வெறும் 100 ரூபாய் தான் மொத்த செலவு. இது போக ரெஜிஸ்டர் டாக்குமன்ட் காப்பி , சிட்டா அடங்கல் கூட இங்கு காப்பி கிடைக்கும். சென்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

படம்
கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...தினம் தினம் பல பாடம்களை நாம் படித்தும் கேட்டும் வருகிறோம் ..நமக்கு தெரிந்ததை அனைவருக்கும் கற்றுகொடுப்போம் ..வாருங்கள் நல்ல நாளைய சமுதாயத்தை உருவாக்குவோம்....  நண்பர்களே..அன்பு நண்பருக்கு ஒரு வேண்டுகோள்...இன்னும் பல பேர் ஆங்கிலத்தை அப்படியே டைப் செய்து வெளியிடுகிறீர்கள்.. ஆக உங்களுக்கு தமிழ் மொழியை முக நூலில் மற்றும் இணையத்தில் கையாள தமிழ் மொழியறிவு தேவை படுகிறது.. இதோ உங்களுக்கான சரியான தெரிவு... நல்ல விஷயத்தை நாம் அனைவருக்கும் தெரியும் வண்ணம் ஏன்நம்ம தாய் மொழியான தமிழ் இல் பகிர்ந்து கொள்ள கூடாது.. நீங்கள் உங்களது post இல் இந்த http://www.google.co.in/transliterate/indic/tamil மற்றும் http://tamil.changathi.com/ ஆகிய url ஐ பயன்படுத்த கூடாது..நாங்கள் அனுபவிக்கும் இந்த தமிழின் இனிமையை ஏன் நீங்களும் முயற்சிக்க கூடாது....எனக்கு என்னமோ நீங்கள் முயற்சி செய்தால் இதை வெற்றி பெற செய்யலாம் என்று கருதுகிறேன்.....யோசியுங்கள் தோழர்களே...நம்ம தாய் மொழியை இனிதவறாது  பயன் படுத்துவோம் . Type in Tamil - Google Transliteration....www.google.co.in  நேரடியாக முகநூளி

சிவகாசி பட்டாசு தொழிற்சாலை விபத்து வீடியோ

http://www.youtube.com/watch?v=OVXgTaiWYM0&feature=plcp

அதிகாரிகள்

படம்
சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டியில் உள்ள ஓம் சக்தி பயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 53 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் 11 பேரின் நிலைமை மிக மோசமாக உள்ளது. இதனால் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. விருதநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டியில் உள்ளது ஓம் சக்தி பயர் ஒர்க்ஸ் நிறுவனம். அந்த நிறுவனத்தில் 40 அறைகளில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளும், பட்டாசுகளுக்கான வெடி பொருட்களும் வைக்கப்பட்டிருந்தன. இந் நிலையில் இன்று பிற்பகலில் திடீர் என்று ஒரு அறையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறையே வெடித்து தரைமட்டமானது. அதிலிருந்து பரவிய தீ மளமளவென் அடுத்ததடுத்த அறைகளுக்கும் பரவியதில், அங்கிருந்த பட்டாசுகளும், வெடி மருந்துகளும் வெடித்துத் சிதறின.இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெரும் சத்தத்துடன் அந்த தொழிற்சாலையே வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தது. இதனால் அந்த பகுதியில் புகை மண்டலமாக காட்சியளித்தது. அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தனர்.தகவல்