கேரளாவிற்கு வாகன போக்குவரத்து நிறுத்தம்.............




நெல்லை மாவட்டம் புளியரை வழியே கேரளாவிற்கு தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தென்காசியிலிருந்து கேரள மாநிலம் கொல்லம், திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, புனலூர், கோட்டயம், திருச்சூர் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு தமிழக மற்றும் கேரள அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. செங்கோட்டை வழியே கேரளாவிற்கு ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருப்பதால் பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.
இந்நிலையில் டீசல் விலை உயர்வை கண்டித்தும், காஸ் சிலிண்டர் வினியோகம் குறைப்பை கண்டித்தும் கேரளாவில் நேற்று எதிர்கட்சிகள் பந்த் நடத்த அழைப்பு விடுத்திருந்தது. இதனால் கேரளாவில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வாகனங்கள் ஓடவில்லை. புளியரை வழியே கேரளாவிற்கு செல்லும் வாகனங்கள் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தன. தென்காசியிலிருந்து கேரளாவின் பல்வேறு இடங்களுக்கு செல்லும் பஸ்கள் ஓடவில்லை. இதனால் தென்காசி புதிய பஸ்ஸ்டாண்டில் கேரளா செல்லும் பஸ்கள் நிறுத்தும் பிளாட்பாம் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
வாகன போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் கேரளாவிற்கு செல்லும் பயணிகள், வியாபாரிகள் பெரிதும் அவதிப்பட்டடனர். கேரளாவில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததால் புளியரை செக்போஸ்ட் பகுதியிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்