துப்பாக்கிச் சூட்டில் பலியான மீனவர் குடும்பத்துக்கு ஜெ. ரூ. 5 லட்சம் நிதியுதவி


கூடங்குளம் அணுமின் நிலையத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார்.
கூடங்குளம் கடற்கரையில் தொடங்கிய வன்முறையும் போலீஸ் தாக்குதலும் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கும் பரவியுள்ளது. தூத்துக்குடியில் மீனவர் ஒருவர் போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று மாலை விடுத்துள்ள அறிக்கையில், கூடங்குளம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காது என்றும் கூடங்குளம் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மீனவர் அந்தோணிசாமியின் குடும்பத்துக்கு ரூ5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.










கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்