தென்காசி- திருநெல்வேலி வழித்தடத்தில் புதியரெயில் செப்.21. .முதல் இயக்கம்.


தென்காசி- திருநெல்வேலி வழித்தடத்தில் புதியரெயில்
செப்.21. .முதல் இயக்கம்.
தென்காசி திருநெல்வேலி வழித்தடத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் பயணிகள் ரயில் சேவை நிறுத்தப்பட்டு அகல ரயில் பாதை அமைக்கும் பணி ரூபாய் இருனுற்று இருபது கோடி செலவில் தொடங்கி கடந்த பிப்ரவரி மாதம்முடிந்தது .அதனை தொடர்ந்து பல்வேருகட்ட சோதனைகளும் நடத்தப்பட்டு விரைவில் ரயில்  இயக்கம் தொடங்கும் என்று தென்னக ரயில்வே அறிவித்த நிலையில் கோச் தட்டுபாடு
காரணமாக ரயிலை குறிப்பிட்ட நாளில் இயக்க முடியாத நிலைக்கு தென்னக ரயில்வே தள்ளப்பட்டது .இந்நிலையில் கடந்த இரு மாதத்தில் பல அரசியல் கட்சியினர் மறியல்,ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர் .அதனை தொடர்ந்து கடந்த ஜூலை மாதத்தில் வெளியான ரயில்வே கால அட்டவணையில் தினமும் செங்கோட்டையில் இருந்து நெல்லைக்கு நான்கு முறையும்,மறு மார்க்கத்தில்
நெல்லையிலிருந்து செங்கோட்டைக்கு நான்கு முறையும் ரயில் அட்டவனையை தென்னக ரயில்வே வெளியீட்டு பயனகட்டனதையும் அறிவித்தது, தற்போது வரும் செப்டம்பர் 21..முதல் தென்காசியில் இருந்து நெல்லைக்கு ரயில் சேவையை தொடங்கபடுகிறது இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


செங்கோட்டையிலிருந்து நெல்லைக்கு
காலை :6.30
மதியம் :11.00
மாலை:3.15,6.00

நெல்லையிலிருந்து  செங்கோட்டைக்கு
காலை :6.45,9.00
மதியம் :2.00
மாலை :6.20
கட்டணம் :13.00

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்