காலம் கடந்துவந்தசாரல்............................


குற்றால அருவிகளில் வெள்ளம் குளிக்க தடை................

தமிழக கேரளா எல்லையான  மேற்கு தொடர்ச்சி மலை வனபகுதியில் கடந்த இருதினம்களாகபெய்துவரும் மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை வனபகுதியில் உள்ள அணைகளுக்கு தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது .மேலும் காலம் கடந்து மழை பெய்து வருவதால் விவசாய பணிகளை தொடங்காமல் இருந்த விவசாயிகள் தற்போது விவசாய பணிகளை தொடக்கி யுள்ளனர் .மேலும் இந்த மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது .இதனால் அருவிகளில் குளிக்க போலீசார் தடைவிதித்துள்ளனர் .குற்றாலத்தில் சீசன் தொடங்கியது முதல் நேற்று வரை வெள்ளம் வரவில்லை ,ஆனால் சீசன் முடிந்த பின்பு வெள்ளம் வந்துள்ளது இதுவே முதல் முறையாகும் .காலம் கடந்து பெய்து வரும் மழையால் விவசாயிகள் வேதனையோடு விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர். காலம் கடந்த முயற்சி என்பது போல்காலம் கடந்துவந்த சாரலால் யாருக்கு இலாபம் ...?




குற்றால வியாபாரிக்கும் ,விவசாயிகளுக்கும் ...பாதிப்புதானே  தவிர வேற என்ன ..?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்