மணப்பாடு கிராமத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் மீனவர் பலி


கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர் கிராமங்களில் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. மணப்பாடு கிராம மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றபோது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மீனவர் அந்தோணிசாமி என்பவர் பலியாகியுள்ளார்.
மணப்பாடு கிராம மீனவர்கள் இன்று சாலை மறியல் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு தரப்பினர் குலசேகரப்பட்டனம் காவல் நிலையத்தை முற்றுகையிட சென்றனர். இதையடுத்து அவர்களைக் கலைக்க போலீசார் துப்பாக்கிச் சூட்டில் இறங்கினர். இதில் அந்தோணி சாமி என்ற மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டில் அவரது குடல் வெளியே வந்து கோரமாக பலியானார்.
ஆனால் சாலை மறியலின் போது போலீஸ் சோதனைச் சாவடிக்கு அந்தோணிசாமி தீ வைக்க முயன்றதாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார் என்று போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே முற்பகலில் போலீஸ் நடத்திய தாக்குதலால் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பதற்றம் நீடித்து வன்முறை வெடித்தது. இந்த நிலையில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மீனவர் ஒருவர் பலியாகி இருப்பது பெரும் பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது.






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்