இடுகைகள்

ஆகஸ்ட், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முதலமைச்சரின் தனிப்பிரிவு இனையத்தளம்

படம்
முதலமைச்சரின் தனிப்பிரிவு இனையத்தளம் . இங்கு புகார் அல்லது பெட்டிஷனை அப்ளை பண்ண உங்களுக்கு தேவையானது மின்னஞ்சல் முகவரி அல்லது கைப்பேசி எண் இருந்தால் போதும். இந்த முகவரியில் (http://cmcell.tn.gov.in/register.php) சென்றால் நீங்கள் யூஸர் ஐடி பாஸ்வோர்டை ரிஜஸ்டர் செய்து பெட்டிஷன் கம்பிளெயின்ட் எழுதுவது மட்டுமில்லாமல் இதன் அக்னலாஜ்மென்ட் உடனே உங்கள் மின்னஞ்சலுக்கு ரெஃபரன்ஸ் நம்பரோடு வரும் அது போக கைத்தொலைப்பேசிக்கு குறுந்தகவல் மூலமாகவும் வரும். ஒப்புக்கு சப்பான் என்று பெட்டிஷனை நினைக்க வேண்டாம் இந்த முகவரியில் (http://cmcell.tn.gov.in/login.php) உங்கள் பெட்டிஷன், கம்ப்ளெயின்டை நீங்கள் எந்த நிலையில் இருக்கிறது என்ரு டிராக் செய்யவும் முடியும். அது போக இந்த பெட்டிஷ்ன்களை அவசரகதியாக அந்த டிப்பார்டெமென்டுக்கும் ஃபார்வொர்ட் செய்ய தலைமை செயலகத்தில் தனிப்பிரிவு இயங்குகுறது. கடிதம் மூலம் அனுப்ப வேண்டியவர்கள் இந்த முகவரிக்கு எழுதலாம்....(Chief Minister's Special Cell , Secretariat, Chennai - 600 009. Phone Number : 044 - 2567 1764 Fax Number : 044 - 2567 6929 E-Mail : cmcell@tn.gov.in

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்

படம்
சில நூற்றாண்டுகளுக்கு முன் பாண்டிய நாட்டிலும், சோழ நாட்டிலும் சமணர்களின் ஆதிக்கம் வேகமாக பரவிக் கொண்டடிருந்து. அப்போது சமணர்களின் போட்டியில் தில்லயம்பலமும் அவர்களின் வசமானது. சமணர்களால் கயிலாயநாதர் ஆலயத்தில் வீற்றிருக்கும் நடராஜ பெருமானுக்கு சேதம் வந்து விடுமோ என்று எண்ணிய சிவ பக்தர்கள் கலங்கி நின்றனர். பாண்டிய நாட்டிலும் சரி, சோழ நாட்டிலும் சரி எங்கும் நடராஜர் விக்ரகத்தைப் பாதுகாக்க முடியாதே?. என்ன செய்யலாம் என ஆலோசித்தனர். நீண்ட யோசனக்குப் பின்பு, நடராஜர் சிலைய அங்கிருந்து எடுத்துக் கொண்டு அடர்ந்த காட்டுக்குள் எங்கேயாவது  மறைத்து வைத்து விடுவோம், சமணர்கள் ஆதிக்கம் ஓய்ந்த பின்பு மீண்டும் எடுத்து வந்து ஆலயத்தில் வைத்து விடலாம் என முடிவெடுத்தனர். ஐந்து சிவபக்தர்கள் அந்த வேலயைச் செய்வது என தீர்மானித்து நல்ல நாளுக்காக காத்திருந்தனர். அமாவாசை முடிந்து வளர்பிறை ஆரம்பமாகும் காலம். நடராஜர் சிலயை கையில் எடுத்து மனம் போன போக்கில் தென் திசை நோக்கி நடக்கத் துவங்கினார்கள் அந்த ஐந்து பக்தர்களும் பகலெல்லாம் சமணர்கள் கண்ணில் பட்டு விடாமல் ஜாக்கிரதையாக தங்கிக் கொண்டு இரவு முழுவதும்

வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டை-கொல்லம் ரயில் பாதை

படம்
வரலாற்று சிறப்பு மிக்க ரயில் பாதைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது செங்கோட்டை-கொல்லம் ரயில் பாதையாகும். 1873ம் ஆண்டு அப்போதைய ஆங்கிலேய அரசால் தொடங்கப்பட்ட செங்கோட்டை-கொல்லம் ரயில் பாதை பணிகள் 27 ஆண்டுகள் நடைபெற்றது. இப்பாதையை அமைத்திட தென்னிந்திய ரயில்வே கம்பெனி ரூ.17 லட்ச ரூபாயும் , திருவாங்கூர் நிர்வாகம் ரூ.7 லட்ச ரூபாயும் , அப்போதைய திருவாங்கூர் திவான் ராமய்யர் ரூ.6 லட்சம் ஆக ரூ.30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இப்பணிகள் தொடங்கப்பட்டு 1901ம் ஆண்டு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 1902ம் ஆண்டு முதல் சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. 1901ம் ஆண்டு கொச்சி துறைமுகத்திற்கு கப்பல் வழியே ரயி்ல்  பெட்டிகள் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து மாட்டு வண்டிகளில் பொருட்களை ஏற்றி கொல்லம் கொண்டு வரப்பட்டு முதல் பயணிகள் ரயில் போக்குவரத்து 1904ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி கொல்லம் ரயில் நிலையத்தில் வைத்து 21 குண்டுகள் முழங்கிட அங்குள்ள ரயில் நிலைய மேலாளர் ராமைய்யா என்பவர் முதல் பயணிகள் ரயிலை கொல்லத்தில் இருந்து செங்கோட்டைக்கு கொடியசைத்து துவங்கி வைத்தார். ரயிலின் ப
படம்
எண் கணிதத்திற்கு விடை கண்ட எங்கள்  மண்ணின் மைந்தனுக்கு நினைவு அஞ்சலி.............! (ஆகஸ்ட் 31ம் தேதி அதிகாலை 3 மணி) ஒரு காலத்தில் செழுங்கோட்டையாக விளங்கிய நகரம் செங்கோட்டை. கேரளத்திலிருந்து மேற்கு தொடர்ச்சி மலையின் சாரலில் உதிர்ந்து விழுந்த ஒரு நிலாத்துண்டு. தென்னையும், புன்னையும், வாழையும் மயங்கிக் கிடக்கும் வளமார்ந்த பூமி.செங்கோட்டை  இந்த மண் தான் சுதந்திர இந்தியாவுக்கு வீரவாஞ்சிநாதனையும், இசைக்கு ஒரு கிட்டப்பாவையும், கணிதத்திற்கு ஒரு எஸ்எஸ் பிள்ளையையும் இவ்வுலகிற்கு தந்தது. கிட்டப்பாவின் புகழ் தமிழ்நாட்டோடு நின்றது. வீர வாஞ்சியின் புகழ் இந்திய அளவில் படர்ந்தது. டாக்டர் எஸ்.எஸ்.பிள்ளையின் புகழோ உலகளவில் விரிந்து பரந்தது. தமது 35வது வயதிலேயே ஒரு மிகப்பெரிய ஆராய்ச்சினை மேற்கொண்டு, அதில் வெற்றி பெற்று நம் நாட்டை கணித மேதை இராமானுஜத்திற்கு பின் உலகிற்கே அடையாளம் காட்டியவர் டாக்டர் சிவசங்கர நாராயண பிள்ளை என அழைக்கப்பெற்ற டாக்டர் எஸ்.எஸ். பிள்ளை அவர்கள். அவர் 1901 ஏப்ரல் மாதம் 5ம் தேதியன்று கணிதவுலகம் சிறக்க வல்லம் என்ற கிராமத்தில் தோன்றினார். தொடக்கக் கல்வி இலத்தூரில் கழிந்
படம்
பொன் ஓணம் நாளை கோலாகலமாக கொண்டாடபடுகிறது கேரளா மாநிலத்தில்  ஜாதி மத வேறுபாடின்றி அணைத்து தரப்பு மக்களாலும் இன்முகத்தோடு  கொண்டாடப்படும் திரு ஓணம் எனும் பொன் ஓணம் நாளை  கோலாகலமாக கொண்டாட படுகிறது . கேரள மக்களின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை உற்சாகத்துடன் தொடங்கியுள்ளது. ஜாதி, மத பேதமின்றிக் கொண்டாடப்படும் மிகப் பெரிய திருவிழாவான ஓணம் பண்டிகை பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. "அத்தம் (ஹஸ்தம்) தொடங்கி பத்து நாள்வரை' என்பது சொல்வழக்கு. ஆவணி மாதத்தில் ஹஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கும் விழா, சித்திரை, சுவாதி, விசாகம், அனுசம், கேட்டை, மூலம், பூராடம், உத்ராடம், திருவோணம் என பத்து நட்சத்திர நாளிலும் கொண்டாடப்படுகிறது. கடைசி நாளான திருவோணத்தன்று தன் மக்களைத் தேடி வரும் மகாபலி மன்னனை வரவேற்க கேரள மக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் "அத்தப் பூக்கோலம்' போட்டு, புத்தாடைகள் அணிந்து தீபாவளி போன்றே பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடுகின்றனர். ஒரு முறை சிவாலயத்துள் எரிந்து கொண்டிருந்த விளக்கின் திரியைத் தூண்டிப்பிரகாசமாக எரிய உபகாரம் செய்தது ஒரு எலி. எனவே அவ்வெலிக்கு மூன்று லோகத்த
படம்
இளம் பெண் எரித்து கொலை  தென்காசி அருகே உள்ள கீலப்புளியூர் சிற்றாற்றிக்கு செல்லும் வழியில் இன்று அதிகாலை இருபத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு இளம் பெண் கற்பழித்து எரித்து கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தென்காசி போலீசாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து டிஎஸ் பீ .பாண்டியராஜன் தலைமையில் போலீசார்வரைந்து சென்று உடலை கை பற்றி விசாரணை நடத்திவருகின்றனர் ..மேலும் இளம் பெண் எரித்து கொலை செய்யப்பட்ட இடத்தில மாடு பாட்டில் கள் கிடந்ததையும் கை பற்றிஉள்ளனர் ,அப்பெண் அணிந்துள்ள தங்கநகைகள் ,கொலுசு ,போன்றவைகள் அப்படியே உள்ளது ,மேலும் குற்றலதிற்க்கு கூட்டிவந்து கற்பழித்து கொலை செய்துவிட்டு இங்குவந்து எரித்து கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர் .இச்சம்ம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
படம்
கேரளாவுக்கு  எரிசாராயம் கடத்தல் .   . தமிழ்நாட்டில் இருந்து தினமும் புளியரை வழியாக ஆயிரகணக்கான வாகனம்கள் பல்வேறு அத்தியாவசிய பொருட்களை ஏற்றி சென்றுவருகிறது .தற்போது அங்கு ஓணம் பண்டிகை நெருங்கிவருவதால் பலத்த பாது காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது .தீவீர வாகன சோதனைகளும் நடத்தப்பட்டு வருகிறது ,நேற்று நடந்த வாகன சோதனையில் திருவல்லா எனும் பகுதியில் இருநூறு கேன்களில் எரிசாராயம் பிடிபட்டது .தமிழகத்தில் இருந்து புளியரை வழியாக கடத்தப்பட்டதும் தெரியவந்ததை தொடர்ந்து ஆரியன்காவு மதுவிலக்கு சோதனை சாவடியில் விஜிலன்ஸ் போலிசார் ஆறு பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர் மேலும் நேற்றுமாலை முதல்  விஜிலன்ஸ் போலிசார் ஆரியன்காவு மதுவிலக்கு சோதனை சாவடியில் தீவீர வாகனசோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.இன்று காலை சுமார் ஆறு மணியளவில் அதிக போலீசார் சோதனையில் ஈடு  பட்டிருந்த போது ஒருமினி லாரி வந்தது .அது மீன் கழிவுகளை ஏற்றிவந்த லாரி அதனை போலீசார் சோதனை செய்தனர் அப்போது மினிலாரி டிரைவர் சதீஷ் தப்பியோடினார் .மினி லாரி யை போலீசார் முழுமையாய் சோதனை செய்தபோது அதன் உள்ளே 52 கேன்களில் எரிசாராயம் இருப்பது கண்டு
எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க......மாத்தி யோசி .... பிறந்த குழந்தை பேசியதாகவும் 4 ஆயிரம் பேரை பழிவாங்குவேன் என்று அந்த குழந்தை தெரிவித்ததாகவும் வதந்தி பரவியதால் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பரபரப்பு கிளம்பியுள்ளது. இதனால் பீதி அடைந்துள்ள பொதுமக்கள் தங்களின் குழந்தைகளை பாதுகாக்க பரிகாரபூஜைகளை செய்யத் தொடங்கியுள்ளனர். எஸ்.எம்.எஸ் மூலம் வதந்தி பரப்புவதும், பீதியை கிளப்புவதும் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. வட கிழக்கு இந்தியர்களுக்கு எதிரான எஸ்.எம்.எஸ் பீதி அடங்கும் முன்போ மெகந்தி பீதி கிளம்பியது. இதனால் தமிழ்நாடு முழுவதும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு விடிய விடிய மருத்துவமனைகளில் குவிந்தனர் பொதுமக்கள். பின்னர் அது வதந்தி என்று தெரிந்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். நாட்டின் பாதுகாப்பிற்கு சவால் விடும் இத்தகைய எஸ்.எம்.எஸ்களை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது மத்திய அரசு. மேலும் வதந்தியை கிளப்பும் இணைய தளங்கள் முடக்கப்பட்டன. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் தற்போது பிறந்த குழந்தை பேசியதாகவும், அது சாபம் விட்டதாகவும் பரபரப்பு கிளம்பியுள்ளது.
6 குழந்தைகள் பெற்ற பின்பும்  அதுக்காக ...கணவனை கொலை செய்த பெண் ...ஆறு குழந்தைகள் அனாதையாகினர்.....  தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள செட்டிகுளத்தை சேர்ந்தவர் முருகன். டிராக்டர் டிரைவரான இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு 3 பெண்கள், 3 ஆண்கள் என 6 குழந்தைகள் உள்ளனர். கடந்த 14ம் தேதி இவர் திடீரென இறந்தார். வீட்டிற்கு வெளியே வந்த போது தனது கணவர் சுருண்டு விழுந்து இறந்து விட்டதாக சுமதி தெரிவித்ததன் பேரில் முருகனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.இந்நிலையில் முருகன் கொலைசெய்யப்பட்டதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கிடைத்தது.இதையடுத்து போலீசார் முருகனின் வீட்டை கண்காணித்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அடிக்கடி முருகன் வீட்டுக்கு வந்து சுமதியை சந்தித்து விட்டு சென்றார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சுமதியை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் கள்ளகாதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததை ஓப்புக் கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது, சுமதிக்கும் அதே தெருவை சேர்ந்த அய்யாகுட்டி மகன் கரையாண்டிக்கும்நீண்டகாலமாக கள்ளதொடர்பு இருந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந
படம்
விழிகளுக்கு விருந்தாய் நல்ல பலவ வீடியோ க்களை கண்டுகளிக்க வாருங்கள் .... http://www.youtube.com/user/sengaibharathi?feature=results_main