6 குழந்தைகள் பெற்ற பின்பும் 
அதுக்காக ...கணவனை கொலை செய்த பெண் ...ஆறு குழந்தைகள் அனாதையாகினர்..... 




தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள செட்டிகுளத்தை சேர்ந்தவர் முருகன். டிராக்டர் டிரைவரான இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு 3 பெண்கள், 3 ஆண்கள் என 6 குழந்தைகள் உள்ளனர். கடந்த 14ம் தேதி இவர் திடீரென இறந்தார். வீட்டிற்கு வெளியே வந்த போது தனது கணவர் சுருண்டு விழுந்து இறந்து விட்டதாக சுமதி தெரிவித்ததன் பேரில் முருகனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.இந்நிலையில் முருகன் கொலைசெய்யப்பட்டதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கிடைத்தது.இதையடுத்து போலீசார் முருகனின் வீட்டை கண்காணித்தனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அடிக்கடி முருகன் வீட்டுக்கு வந்து சுமதியை சந்தித்து விட்டு சென்றார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சுமதியை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் கள்ளகாதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததை ஓப்புக் கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது, சுமதிக்கும் அதே தெருவை சேர்ந்த அய்யாகுட்டி மகன் கரையாண்டிக்கும்நீண்டகாலமாக கள்ளதொடர்பு இருந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்தனர். இதை அறிந்த முருகன் அவர்களை கண்டித்தார். இந்நிலையில் முருகனின் மூத்த பெண்ணுக்கு சடங்கு நடத்த சுமதி கடன் வாங்கினார்.

இதை திரும்ப செலுத்த அவர் கணவரிடம் பணம் கேட்டார். ஆனால் முருகன் தர மறுத்து விட்டார். கள்ள காதலுக்கு இடையூறாக இருப்பதுடன் பணம் வைத்து கொண்டே தரமறுப்பதாலும் முருகனை கொலை செய்ய சுமதியும், கரையாண்டியும் முடிவு செய்தனர். அதன்படி கடந்த 14ம் தேதி அவருக்கு அளவுக்கு அதிமாக மது வாங்கி கொடுத்தனர்.போதை மயக்கத்தில்இருந்த முருகனை சுமதி தலையாணையால் அழுத்த காரடையான்அவரது கழுத்தை நெரித்துள்ளார். இதில் முருகன் இறந்தார். உடனடியாக இருவரும் சேர்ந்து உடலை வீட்டு முன் போட்டனர். நன்றாக இருந்த எனது கணவர் திடீரென சுருண்டு விழுந்து இறந்துவிட்டதாக சுமதி கதறி அழுது ஊர் மக்களை நம்ப வைத்தார்.

இதையடுத்து முருகனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் முருகனின் வீட்டை தீவிரமாக கண்காணி்த்தபோது குட்டு வெளிப்பட்டது. இதையடுத்து போலீசார் சுமதியை கைது செய்தனர். தலைமறைவான காரயடியனை தேடி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படு்த்தியுள்ளது.இப்பெண்ணின் கள்ளகாதலால் ஆறு குழந்தைகள் அனாதையாகி உள்ளனர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்