மகாராஷ்டிரா பல்லாரிக்கு திடீர் மவுசு
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் பல்லாரி பயிரிடப்பட்டு தற்போது மகசூல் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பருவ மழையும், சாரல் மழையும் பொய்த்து விட்டதால் தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டு பல இடங்களில் பல்லாரி கருவிவிட்டது. எனினும் ஒரு சில பகுதிகளில் கிணற்று பாசனம் மூலம் பல்லாரி பயிரிடப்படுகிறது. இவ்வகைக்கு போதிய தண்ணீ4ர் இல்லாததால் பல்லாரி சிறிதாகவே காணப்படுகிறது. இதனால் ஏக்கருக்கு 12 டன் மகசூல் கிடைப்பதற்கு பதில் 5 முதல் 6 டன் வரை மட்டுமே மகசூல் கிடைக்கிறது.
பாவூர்சத்திரத்தில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், சென்னை மற்றும் கேரளாவுக்கு தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் பல்லாரி கொண்டு செல்லப்புடுகிறது. இருப்பினும் மகாராஷ்டிராவில் விளைச்சலாகும் பல்லாரி மதுரை மார்க்கெட் மூலம் நெல்லை, தூத்துக்குடி பாவூர்சத்திரம், ஆலங்குளம், சுரண்டை, தென்காசி போன்ற பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. உள்ளூர் பல்லாரி சிறுத்து காணப்படுவதால் கிலோ ரூ10 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் மகாராஷ்டிரா பல்லாரி ரூ.14 வரை வி்ற்பனையாகிறது.
.
கருத்துகள்
கருத்துரையிடுக