சுற்றுலா பயணிகளுக்கு தடை-சுதந்திரமாக திரியும் வன விலங்குகள்
நாடு முழுவதும் புலிகள் காப்பாக பகுதிகளில் சுற்றுலா நடவடிகைகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அவற்றை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவி்க்குமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.இதையொட்டி தமிழ்நாட்டில் உள்ள ஆனைமலை, முதுமலை, களக்காடு முண்டத்துறை புலிகள் காப்பகம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அரசு அறிவி்த்துள்ளது. தமிழகத்தின் கடைகோடியில் இருக்கும் நெல்லை மாவட்டம் பாபநாசம் முண்டத்துறை புலிகள் காப்பாக பகுதியில் ஆன்மிக மற்றும் சுற்றுலா தலங்கள் நிறைந்துள்ளன. இந்நிலையில் உச்சநீதிமன்ற தடை உத்தரவை தொடர்ந்து அங்கு சுற்றுலா தொடர்பான வளர்ச்சிபணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. கோடிக்கணக்கான சுற்றுலா மாளிகைகள் மூடப்பட்டு வருமானம் முடங்கியுள்ளது.
கடந்த 25ம் தேதி முதல் வனத்துறையினர் பாபநாசம் மற்றும் முண்டந்துறை பகுதியில் உள்ள அகஸ்தியர் அருவி, பாணதீர்த்த அருவி, பாபநாசம் அணையில் படகு போக்குவரத்து மற்றும் பிரசித்த பெற்ற கரையார் சொரிமுத்து அய்யனார் கோவில், அகஸ்தியர் கோயில், கோடிலிங்க கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதித்தனர். பின்னர் பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே கடந்த 29ம் தேதி முதல் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல தடை இல்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சுற்றுலாவுக்கு தடை விதித்ததால் வாகனங்கள் வனபகுதிக்குள் நுழையவில்லை. இதனால் பாபநாசம் முதல் கரையார் வரை வனவிலங்குகள் சுதந்திரமாக உலா வருகின்றன. இரவு நேரங்களில் மட்டுமே சாலையில் உலா வந்த மான், மிளா, காட்டுபன்றிகள், தற்போது பகலிலும் எவ்வித அச்சமின்றி சுற்றி திரிகி்ன்றன.
கருத்துகள்
கருத்துரையிடுக