காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்







சில நூற்றாண்டுகளுக்கு முன் பாண்டிய நாட்டிலும், சோழ நாட்டிலும் சமணர்களின்
ஆதிக்கம் வேகமாக பரவிக் கொண்டடிருந்து. அப்போது சமணர்களின் போட்டியில்
தில்லயம்பலமும் அவர்களின் வசமானது. சமணர்களால் கயிலாயநாதர் ஆலயத்தில்
வீற்றிருக்கும் நடராஜ பெருமானுக்கு சேதம் வந்து விடுமோ என்று எண்ணிய சிவ
பக்தர்கள் கலங்கி நின்றனர். பாண்டிய நாட்டிலும் சரி, சோழ நாட்டிலும் சரி
எங்கும் நடராஜர் விக்ரகத்தைப் பாதுகாக்க முடியாதே?. என்ன செய்யலாம் என ஆலோசித்தனர். நீண்ட
யோசனக்குப் பின்பு, நடராஜர் சிலைய அங்கிருந்து எடுத்துக் கொண்டு அடர்ந்த காட்டுக்குள்
எங்கேயாவது  மறைத்து வைத்து விடுவோம், சமணர்கள் ஆதிக்கம் ஓய்ந்த பின்பு மீண்டும்
எடுத்து வந்து ஆலயத்தில் வைத்து விடலாம் என முடிவெடுத்தனர். ஐந்து சிவபக்தர்கள் அந்த
வேலயைச் செய்வது என தீர்மானித்து நல்ல நாளுக்காக காத்திருந்தனர். அமாவாசை முடிந்து
வளர்பிறை ஆரம்பமாகும் காலம். நடராஜர் சிலயை கையில் எடுத்து மனம் போன
போக்கில் தென் திசை நோக்கி நடக்கத் துவங்கினார்கள் அந்த ஐந்து பக்தர்களும்

பகலெல்லாம் சமணர்கள் கண்ணில் பட்டு விடாமல் ஜாக்கிரதையாக தங்கிக்
கொண்டு இரவு முழுவதும் நடந்தே வெகுதூரம் சென்றனர். பல நாட்கள்  அலைந்து திரிந்தும் ரி
நடராஜரை பாக்காக்க சரியான இடம் தேடி வருந்தினர். எந்த இடமும்
அவர்கள் ஏதுவாக இல்லாத காரணத்தால் தங்கள் பயணத்தை தொடர்ந்து கொண்டே இருந்தனர். பல நாட்கள்
நடந்து நடந்து களைப்படைந்த சமயம் பொதிகை மலைக்கு தென் திசையில் திரிகூடாசலம் என்ற
மலைய அடந்தனர். திரிகூடாசலம்தான் சேர நாட்டின் ஆரம்ப பகுதி. எங்கு பார்த்தாலும்
ஓங்கி வளர்ந்த பசுமயான மரங்கள். தொட்டுத் தழுவிச் செல்லும் மேகம். மேகத்தில்
சற்று வெயில் பட்டவுடன் பன்னீர் போல் தெளித்து விழும் சாரல்.

பறவகளின் கீதமிசக்கும் ஆனந்த கூட்டம். பூமி எங்கும் மண் ஒன்று ஒன்று உண்டா? என
வியக்க வக்கும் வகையில் பசும்புற்களை போர்வை போல விரித்து விடப்பட்டிருக்கும் அற்புதமான ஒரு
இடம் சிவ பக்தர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. ஆள் அரவமற்ற இந்த வனம்தான் நம்
நடராஜரை பாகாப்பாக வைக்க சரியான இடம். இந்த அடர்த்தியான வனத்தில் சிலைய எங்கு
பத்திரமாக வைக்கலாம் என சுற்றும் முற்றும் பார்த்த சமயம் வானத்தில் கருட பகவான்
சுற்றிச் சுற்றி வந்து வட்டமிட்டு இடம் காட்டினார். அவர்கள் வந்து சேர்ந்த இடம்
மிகப் பெரிய புளியந்தோப்பு.

அங்கிருந்த புளிய மரங்களிலேயே ஒரு மரத்தில் மட்டும் மிகப்பெரிய பொந்து காணப்பட்டது.
அதைக் கண்டு சந்தொஷப்பட்ட சிவ பக்தர்கள் நடராஜர் சிலையை அந்த புளிய மரப்பொந்தில் வைத்து விட்டு இலை தழைகளால் மூடிவிட்டு
மீண்டும் தில்லயம்பலம் திரும்பினார்கள்.

 சில காலம் கழித்து காற்று, மழையால் பொந்துக்குள் இருந்த இலை தழைகள் விலகிவிட அங்கு
 நடராஜப் பெருமான் உலகுக்கு காட்சி கொடுத்தார். அந்த
புளியந்தோப்பு செல்வச் செழிப்பான ஒரு சிவ பக்தருக்கு சொந்தமான இடம். ஆஹா,
சிவனே நேரில் வந் அருள் பாலித்துள்ளார் என எண்ணி சந்தோஷமானார். சேர நாட்டு
மன்னனுக்கும் தகவல் சென்ற. மன்னனும் சிவ பக்தன் ஆனதால்,
நடராஜ விக்ரகத்தை எடுக்காமல் அப்படியே வைத்து பூஜை வழிபாடுகளை சிறப்புடன் செய்
வந்தான். நாட்கள் நகர, நகர செழிப்பான சேர நாடு மிகவும் செல்வச் செழிப்பானது,
வாளிப்பானது, வனப்பானது. மன்னனும், மக்களும் மிக மகிழ்ச்சி அடந்தனர்.

சில ஆண்டுகளுக்குப் பின்னர் சமணர்கள் ஆதிக்கம் ஓய்ந்தது. மீண்டும் தில்லயில் சைவம்
தழத்தோங்கியது. ஆனாலும் நடராஜர் இல்லாத அம்பலம், குழந்த இல்லாத வீடு போல்
வெறிச்சோடிக் கிடந்தது. எப்படியாவது மீண்டும் நடராஜரைத் தேடிக் கண்டுபிடித் கோவிலில்
சேர்க்க  வேண்டும் என அப்பகுதி மக்கள் முடிவெடுத்தனர். ஆனால் அம்பலத்தரசன் எங்கிருக்கிறார்?
எந்த திசையில் இருக்கிறார்? என்பது தெரியாமல் தவித்தனர் காரணம் சிலையை மறைந்து வைத்த பக்தர்கள் யாரும் அப்போது உயிருடன் இல்லை. இதனால் இறைவனிடமே கேப்டது எனக்கருதி, வழிபாடு மேற்கொண்டனர். அப்போது. பொதிகை மலைக்கு தெற்கே திரிகூடாசலத்தில் அழகான தீர்த்க்குளம் அமைந்துள்ளது காட்டுக்குச் சென்று பாருங்கள் என்று ஒரு அசரீரி மட்டும் கேட்டது. இதைத் தொடர்ந்து தில்லையிலிருது அந்த இடம் நோக்கி பக்தர்கள் சிலர் பயணத்தை துவக்கினர்.
பலநாட்கள் கஷ்டப்பட்டு திரிகூடாசலம் மலயை அடைந்தனர். எங்கு திரும்பினாலும் அடந்த
மரக்காடு. எங்கே தேடுவது, எப்படித் தேடுவது என நினத்து, திகைத்து நின்ற சமயம்,
வானத்தில் கருடன் வட்டமிட்டது. இதைக்கண்ட பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

அம்பலவாணன நெருங்கி விட்டோம். அவர் இருக்கும் இடத்தை எப்படி கண்டுபிடிப்பது என யோசித்து நின்ற சமயம்
எறும்புகள் பின் செல்க என அசரீரி கேட்து. ஓரிடத்தில் சாரை சாரையாக எறும்புகள் செல்வதைப் பார்த்து அந்த வழியே சென்றனர், அங்கு ஒரு புளிய மரத்தில் நடராஜர் வீற்றிருததைக் கண்டு ஆனந்தமடைந்தனர். உடனடியாக அங்கு சில பூஜைகளைச் செய்து அந்த புளியமரத்திலிருந்து நடராஜன் சிலையை எடுத்துக் கொண்டு ஊர் திரும்பினர். மறு நாள் காலை பொழு விடிந்ததும். சிவ பக்தர் வழக்கம்போல்
பூஜகள் செய்ய புளிய மரத்தினருகே வந்தார். புளியறையிலிருந்த நடராஜரக் காணாமல்
தவித்தார். அழுதார். செய்தி கேட்டு சேர மன்னனும் அங்கு வந்து சேர்ந்தான்.
மன்னனும் மிகவும் கலங்கினான். ஆண்டவா, நாங்கள் என்ன தவறு செய்தோம். ஏன் இப்படி
எங்கள தவிக்க விட்டு சென்று விட்டாய் என கதறி அழுதான்.

அப்பொழுதான் அந்த அதிசயம் நடந்தது .பூமிய பிளந் கொண்டு சிறியதொரு
சிவலிங்கம் தோன்றியது. அந்த புளிய மரமே ஸ்தல விருட்சமானது. சுயம்புவாகத்
தோன்றிய சிவலிங்கத்திற்கு பூஜகள் செய்து சேர நாட்டு முறைப்படி கோவிலும் கட்டப்பட்டது.  வைதீக பிரதிஷ்ட ருக்வேத  சாஸ்திரத்தின்படி ஆலயம் அமக்கப்பட்டுள்ளதால் இந்த ஆலயத்தில் கொடி மரம் பிரதிஷ்ட செய்யப்படவில்ல. கொடி மரம் இருக்கும்
இடத்தில் குரு பகவான் ஸ்ரீ தெட்சிணாமூர்த்தி அமர்ந்து காட்சியளிக்கிறார்.

குரு பார்வை கோடி நன்மை என்ற சொல் விளங்க காரணகர்த்தாவான குரு பகவான்
சுயம்புவாகத் தோன்றி காட்சி கொடுத்த சதாசிவ மூர்த்தி சுவாமிக்கு நேர் எதிரில்
நந்தீஸ்வரருக்கு இடையில் தென்முகமாக அமர்ந்து அருள் பாலிக்கிறார். சாஸ்தாவின்
சொரூபத்திலும் நவக்கிரஹங்களுக்கு அதிபதியாகவும் இங்கு வீற்றிருக்கிறார்.

புளியரை ஸ்ரீ தெட்சிணாமூர்த்தி ஆலய சிறப்புகள்

இந்த அழகு கொஞ்சும் ஆலயத்தில் மூலவர் ஸ்ரீசதாசிவமூர்த்தி, அம்மன ஸ்ரீசிவகாமி
அம்பாள் சகிதம் நித்ய திவ்ய திருமணக் கோலத்தில் அருள்பாலிக்கின்றார். சுவாமிக்கு வல பக்கம் வீற்றிருந்து நித்ய திருமணக் கோலத்தில்
அருள்பாலிக்கின்றார். இதனால் எந்த கிரக நிலை தடுத்து நிறுத்திய
திருமணமானாலும், இங்கு வந்து தரிசனம் செய்தால் திருமணம் கைகூடி வரும் என்பது ஐதீகம்.
அதேபோல் சன்னதிக்கு எதிரே அமைந்துள்ள அழகிய ஜடா மகுட
தீர்த்தக் குளத்தில் நீராடி விட்டு, அரசரடி விநாயகர வணங்கி, 27
நட்சத்திரங்களே படிகளாக அமக்கப்பட்ட அந்த 27 படிகள படிகளில் கீழிருந்
நட்சத்திர வரிசைப்படி, அவரவர் நட்சத்திர படிகளில் பூஜகள் செய் வழிபட்டு, குரு
நாமம், சிவ நாமம் சொல்லி வணங்கி வந்து மேலே சன்னதிக்கு வரவேண்டும்.  சந்நிதிக்கு எதிரே
 நந்தி தேவர், அவருக்கு அடுத்த இடத்தில் குரு பகவான் ஸ்ரீ தெட்சிணாமூர்த்தி, இவர்கள
வணங்கி விட்டு சன்னதியின் உள்ளே அனுக்ஞ விநாயகர் (விநாயகர் சூர்ய அம்சத்தில்
உள்ளதால் இந்த ஆலயத்தில் சூரிய பகவானுக்கு சன்னதி கிடயாது, சூரிய பகவான்
அம்சமாக விளங்கும் விநாயகருக்குத்தான் முதல் பூஜை நடபெறுகிறது) உள்ளே எழிலுடன் அமர்ந்ள்ளது சுயம்பு நாதர் ஸ்ரீ சதாசிவ
மூர்த்தி, அதன் வலப் பக்கம் வலம் வந்தால் ஸ்ரீ சிவகாமி அம்மாள் சந்நிதி.

 எந்த கிரக அமைப்பு ஆனாலும் இங்கு வந்து நவக்கிரகங்களின்
அதிபதியாக வீற்றிருக்கும் குருபகவான் ஸ்ரீ தட்சிணா மூர்த்தியை வணங்கி வட்டு
வந்தால் காரியங்கள் அனத்தும் வெற்றியாகும்.

27 நட்சத்திரங்களுக்கும் வலிமை சேர்க்கும் இந்த ஆலயத்தின் பின்புறம் ஸ்ரீ நவநீதி
கிருஷ்ணன் ஆலயம் எழிலுடன் அமந்ள்ளது.
திருமணமாகி நீண்ட நாட்கள் மழலச் செல்வம் இல்லா ஏங்கும் தம்பதியர் இங்குள்ள ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் சுவாமிக்கு வெண்ணெய் சாற்றி, பால்
பாயசம் நைவேத்யம் செய்து வணங்கி வர குழ்ந்தைப் பேறு நிச்சயம் கிடைக்கும்.  இக்கோவிலுக்கு ஒருமுற தரிசனம் செய்ய வந்த சிருங்கேரி
ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்ய சுவாமிகள், இந்த ஆலயத்தை சின்ன சிருங்கேரி என்று குறிப்பிட்டுள்ளார்.

வெற்றிக்ரமான வியாபாரத்திற்கு முக்கியமான எது ?

ஒரு வெற்றிகரமான வியாபாரியாக வேண்டுமானால் அதற்கு முக்கியமான எது  தெரியுமா? முதலீடு, இடம், கல்வியறிவு, இவை எதுவுமே இல்லை. அனுபவமதான் முக்கியமானது. வியாபார நுணுக்கங்கள் தெரிந்து கொண்ட ஒருவரால்தான் சிறந்த வர்த்தகர் என்று பெயர் எடுக்க முடியும். ஒரு வர்த்தகருக்கு எந்த அளவிற்கு வர்த்தக அறிவு எவ்வளவு உள்ளதோ, அவ்வளவு அதிகமாக அவருக்கு முன்னேற்றத்க்கான வாய்ப்புகள்
கிடக்கின்றன. எனவே வியாபாரியாக விரும்பும் ஒருவர் தன்ன தயார்படுத்திக் கொள்ள
சிறந்த வியாபாரியிடம் வேலை பார்த்த அனுபவம் பெறுவதான்.  ஒரு இளஞர் தகுதி, விருப்பம் ஆகியவற்ற கவனித்து தமக்கேற்ற வியாபாரத்தைச்  தேர்ந்
எடுக்க வேண்டும். அதன் பின்னர் அந்த வியாபாரம் பற்றிய பூரண அறிவைப் பெற்றுவிட வேண்டும்.

ஒருபெரிய வியாபாரி ஒருவர் கூறுகையில், எங்களுடய நிலையத்தில் வேலை செய்பவர்களில் அனேகமாக எல்லோரும் ஏணியில் அடியில் இருந்து தங்களுடய
வாழ்க்கையை ஆரம்பித்தவர்கள்தான். அவர்கள் தங்கள் நிறுவனத்தின் நலன் கருதி பணியாற்றும்
போது, அவர்கள் தங்களுக்கே தங்கள் இரட்டிப்பு நன்மை செய்து கொள்கிறார்கள். வாழ்வைத் தொடங்கும் ஒவ்வொரு இளைஞனும் இதனை நன்கு நினவில் வைத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் அவ்விதம் செய்வார்களேயானால் அவர்களுடய வருங்கால வெற்றி
நிச்சயமானததாகும். எங்களிடம் வேலை தேடி வருபவர்கள் கூறும் வேண்டுகோளை நாங்கள்
செவி மடுக்கிறோம். அவர்கள் தகுதியானவர்களாக இருப்பின் சீக்கிரத்தில் எங்கள் வியாபார நிலையத்தில் சேர்த்துக் கொள்கிறோம் என்று கூறினார்.

 வியாபாரியாக விரும்பிய இளஞர் ஒருவர் தனக்கு பிடித்தமான அரை டஜன் கடைகளைத் தேர்ந்தெடுத்து விடா முயற்சியுடன் பல முறை அங்கு சென்று வேல
தேடுவானாயின் வேலை இல்லை என்று கூறிய இடத்திலேயே நிச்சயம் வேலை கிடக்கும்
என்பதுடன்,பின் அவரயும் ஒரு வியாபாரியாக மாற்றும்.

யாருக்கு வர்த்தக யோகம் கிடக்கும்

நவ கிரகங்களில் சந்திரன், புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள், வர்த்தக
கிரகங்கள் ஆகும். வர்த்தகத்தில் உயர்வு காண இந்த கிரகங்களின் பங்கு மிகவும்
முக்கியமான ஆகும்.

பொவாக ரிஷபம், மினம், கடகம், கன்னி, துலாம் ஆகிய ராசிக்காரர்கள் வியாபாரம்
செய்யும் பட்சத்தில் வெற்றி காணலாம். ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தில் 4ம்
இடத்தில் சந்திரன், புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் பலம் பெற்று
வீற்றிருக்கும் பட்சத்தில் அவர் வியாபாரம் செய்வதில் விருப்பம்
உள்ளவராகவும், வல்லுநர் ஆகவும் லாபம் ஈட்டுபவராகவும் இருப்பார். ஆனால் லக்னத்தின்
10 ஆம் இடத்தில் இந்த ஜாதகங்கள் இருக்க அவர் வியாபாரத்தில் வெற்றி என்பது அரிதாகும். மேலும் சந்திரன், புதன்,
சுக்கிரன் ஆகிய கிரகங்கள் பலமிழந்தாலும் வியாபாரத்தில் விருத்தி
காண்பது கடினமாகும்.

பொவாக வியாபாரம் செய்து வருபவர்கள் தவறாமல் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடுவது நல்லது.  முடிந்தால் திருப்பதி சென்று ஏழுமலயான வழிபட்டு வருவதுவ் நல்லது. வியாபாரம் செய்து வருபவர்கள் தங்கள் ஸ்தாபனங்களில் குபேர யந்திரத்தை வைத்து பூஜை செய்து வழிபடுவதன் மூலம் முழுமயான லாபம் அடயலாம். குபேரன், பூராடம் நட்சத்திரம், தனுசு ராசியில் பிறந்ததாக சொல்லப்படுகிறது. குபேர ஜாதகத்த ஒரு தங்க
தகட்டிலோ அல்லது வௌ¢ளி தட்டிலோ எழுதி வைத்து வழிபடுவது நல்லது.

வியாழக்கிழமை தோறும் அந்த தகடுக்கு  பூஜைகள்  செய்து வருவதன் மூலம் வர்த்தகத்தில்
முன்னேற்றம் பெறலாம். வியாழக்கிழமையும், பூசம் நட்சத்திரமும் இணந்து வருகின்ற
நாளில் குபேர ஜாதகத்தை வழிபட்டு வந்தால் இன்பமான வாழ்வை பெறலாம். பெரிய
மனிதர்களின் சேர்க்கையும், செல்வமும் வளமும் கிட்டும்.


.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...