சுதந்திர தினவிழா கடந்த ஆண்டுக்குரிய அழைப்பிதழ்
கடையநல்லூர் நகராட்சி உள்பட அரசு அலுவலகஙகளில் சுதந்திர தினவிழா நேற்று மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற தலைவர் சைபுன்னிசா கொடியேற்றி வைத்தார். துணை தலைவர் ராசையா, பொறியாளர் ராமலிங்கம், இளநிலை பொறியாளர் அமகது அலி, சுகாதார ஆய்வாளர்கள் ராமசந்திரன்,சேகர், கவுன்சிலர்கள் ஆறுமுகச்சாமி, முத்தையாபாண்டி, கினாமுத்துபாண்டி, ஆறுமுகத்தமாள், கணபதி தேவர், வீரபாபு, முத்துகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உதவியாளர் மாரியப்பன் நன்றி கூறினார். முன்னதாக நகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு நகர்மன்ற தலைவர் சைபுன்னிசா மாலை அணிவி்த்தார். இந்நிலையில் சுதந்திர தினமாக நடந்து கொண்டிருக்கும் போது ஒரு சில நகராட்சி கவுன்சிலர்களுக்கு இந்த ஆண்டுக்குரிய சுதந்திர தினவிழா அழைப்பிதழ் அனுப்பாமல் கடந்த ஆண்டுக்குரிய அழைப்பிதழ் அனுப்பப்பட்டத்தாக காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் குலாம், முன்னாள் காங்கிரல் மாவட்ட செயலாளர் சண்முகவேல், மாவட்ட செயலாளர் நவாஸ், சமுத்திரம், யூசுப் உள்ளிட்ட பலர் அதிகாரிகளிடம் குற்றம் சாட்டினர்.
கடையநல்லூர் நகராட்சியில் நிர்வாக சீர்கேட்டிற்கு இது ஒரு எடு்த்துக்காட்டாக விளங்குகிறது. இதுபோல தான் குடிநீர், சுகாதாரம், விளக்கு போன்ற அடிப்படை தேவைகளை வழங்குவதில் இருந்து வீட்டு வரி, நிர்ணயம், பட்டா பெயர் மாற்றம் கர்ப்பிணி உள்பட பலருக்கு உதவி தொகை வழங்குவது உள்ளிட்ட அனைத்திலும் நகராட்சி நிர்வாகம் பொறுப்பின்றி நடந்து கொள்வதாக காங்கிரசார் குற்றம் சாட்டினர். பின்னர் அதிகாரிகள் தரப்பில் கடந்த ஆண்டு அழைப்பிதழை மாடலாக கொண்டு புது அழைப்பிதழ் தயார் செய்யும் போது பழைய அழைப்பிதழே தவறுதலாக ஒரு சிலருக்கு அனுப்பப்பட்டு விட்டது. எதிர்பாரத விதமாக இது நடந்து வி்ட்டது என வருத்தம் தெரிவித்தார்.
கருத்துகள்
கருத்துரையிடுக