கேரளாவுக்கு  எரிசாராயம் கடத்தல் .  .






தமிழ்நாட்டில் இருந்து தினமும் புளியரை வழியாக ஆயிரகணக்கான வாகனம்கள் பல்வேறு அத்தியாவசிய பொருட்களை ஏற்றி சென்றுவருகிறது .தற்போது அங்கு ஓணம் பண்டிகை நெருங்கிவருவதால் பலத்த பாது காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது .தீவீர வாகன சோதனைகளும் நடத்தப்பட்டு வருகிறது ,நேற்று நடந்த வாகன சோதனையில் திருவல்லா எனும் பகுதியில் இருநூறு கேன்களில் எரிசாராயம் பிடிபட்டது .தமிழகத்தில் இருந்து புளியரை வழியாக கடத்தப்பட்டதும் தெரியவந்ததை தொடர்ந்து ஆரியன்காவு மதுவிலக்கு சோதனை சாவடியில் விஜிலன்ஸ் போலிசார் ஆறு பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர் மேலும் நேற்றுமாலை முதல்  விஜிலன்ஸ் போலிசார் ஆரியன்காவு மதுவிலக்கு சோதனை சாவடியில் தீவீர வாகனசோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.இன்று காலை சுமார் ஆறு மணியளவில் அதிக போலீசார் சோதனையில் ஈடு  பட்டிருந்த போது ஒருமினி லாரி வந்தது .அது மீன் கழிவுகளை ஏற்றிவந்த லாரி அதனை போலீசார் சோதனை செய்தனர் அப்போது மினிலாரி டிரைவர் சதீஷ் தப்பியோடினார் .மினி லாரி யை போலீசார் முழுமையாய் சோதனை செய்தபோது அதன் உள்ளே 52 கேன்களில் எரிசாராயம் இருப்பது கண்டு  பிடிக்கப்பட்டது .எரிசரயதையும்,வேனையும் பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய சதிஷை தேடிவருகின்றனர் .இந்த சோதனை காரணமாக தமிழக கேரளா எல்லை பகுதியில் பதினாறு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு உருவாகியுள்ளது . .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்