தமிழக முதல்வர் ஏழை எளிய மக்களின்  மேம்பாட்டிற்காக பல்வேறு நலத்திட்ட உதவிகள் மேற்கொண்டு வருகிறார்-அமைச்சர் செந்தூர்  பாண்டியன்


நெல்லை மாவட்டத்தில் 60 ஆயிரம் ஆதரவற்றவர்களுக்கு முதியோர் உதவி தொகை வழங்கப்படுவதாக கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் செந்தூர்  பாண்டியன் தெரிவித்தார்.
கடையநல்லூரில் தமிழக அரசு சார்பில் மாற்று திறனாளிகள் மனித நேய திருவிழா நடந்தது. பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற இவ்விழாவுக்கு மாவட்ட கலெக்டர் செல்வராஜ் தலைமை வகித்தார். யூனியன் சேர்மன் பானுமதி, துணை சேர்மன் பெரிய துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி ஆர்டிஓ ராஜ்கிருபாகரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாற்று திறனாளிகள், தொழு நோயாளிகள், திருநங்கைகள், முதியோர் உள்பட 176 பேருக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கி அமைச்சர் பேசியதாவது,
தமிழக முதல்வர் ஏழை எளிய மக்களின்  மேம்பாட்டிற்காக பல்வேறு நலத்திட்ட உதவிகள் மேற்கொண்டு வருகிறார். முதியோர் உதவி தொகை 500 ரூபாய் வழங்கப்பட்டதை ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார். இதனால் ஆதரவற்ற ஏழை எளியோர் நிம்மதியாக வாழும் சூழ்நிலை உள்ளது. நெல்லை மாவட்டத்தில் 60 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுபோல் நெல்லை மாவட்டத்தில் 70 ஆயிரம் பேருக்கு இதுவரை விலையில்லா மிக்சி, கிரைண்டர் வழங்கப்பட்டுள்ளது.



தமிழக முதல்வரின் கறவை மாடுகள் வழங்கும் திட்டம், ஆடுகள் வழங்கும் திட்டம், மாற்று திறனாளிகளுக்கு உதவி வழங்கும் திட்டம் ஆகிய திட்டங்களை மற்ற மாநிலங்களும் பின்பற்றும் சூழ்நிலை உள்ளது. தமிழக  முதல்வர் ஜெயல்படுத்தி வரும் பசுமை வீடுகள் திட்டம் இந்திய அளவில் புகழ்பெற்று வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் புளியங்குடி எம்எல்ஏ துரையப்பா, தென்காசி தாசில்தார் தேவபிரான், அதிமுக தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன்,  செல்லப்பன், சங்கரபாண்டியன், , செங்கோட்டை யூனியன் சேர்மன் முருகையா, வழக்கறிஞர் பிரிவு செயலர் மாடசாமி பாண்டியன், மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், , செல்லப்பா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்