தமிழகத்தின் பல பகுதிகளுக்கு   நெல்லை  உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்துதான் வாலை இலை அனுப்ப பட்டு வந்தது தற்போது மழையின் காரணமாக இதுக்கும் தட்டு பாடு வந்து விட்டது .
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை விவசாயிகள் மற்றும் பொது மக்களை ஏமாற்றியதால் விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டது. அணைகள், குளங்கள் நிரம்பாததால் நெல் பயிரிடுவோர் பயிர் செய்யவில்லை. அதே போல தென்னை, வாழை போன்ற பயிர்களும் பெருமளவு பாதிக்கப்பட்டது. இதனால் காய்கறி, இலை போன்ற பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. ஆவணி மாதத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் அதிக அளவு நடைபெரும் நிலையில் காய்கறி விலை உயர்வால் ஏழை, நடுந்தர மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.மேலும் தற்போது தொடர்ந்து திருமண தினம்கள் வருவதால் திருமண வீட்டார் வேதனையில் உள்ளனர் .

இந்நிலையில் சாப்பிடுவதற்கான வாழை இலை ஒன்று தற்போது ரூ.4 வரை விற்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பல ஹோட்டல்களில் வாழை இலைக்கு பதில் பேப்பர் இலை பயன்படுத்தப்பட்டு வருகிறது. திருமணங்களிலும் செயற்கை இலை பயன்பாடு அதிகரித்து வருகிறது. சாதாரணமாக 5 இலைகள் கொண்ட 1 பூட்டு இலை ரூ.4க்கு விற்ற காலம் போய் தற்போது 1 இலை 4 ரூபாய் விற்கப்படுவதால் செயற்கை இலை வாங்குவதை தவிர வேறு வழியில்லை எனவும் பல நேரங்களில் ஒரு இலை நான்கு ரூபாய்க்கு கூட கிடைப்பதில்லை எனவும் ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்தனர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்