தென் மாவட்ட மக்களை தொடர்ந்து ஏமாற்றும் தென்னக ரயில்வே வரும் -ஆனா வராது.................................
நெல்லை-தென்காசி அகல பாதையில் ரயில் இயக்க ரயில்வே நிர்வாகம்
இழுத்தடித்து வருகிறது. ரூ.220 கோடி ரூபாய் வேஸ்ட் என பயணிகள் நலச்சங்கம் சார்பில்
ஒட்டப்பட்டு்ள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென்காசி மற்றும் கேரள மக்கள் தென்காசி
செல்வதற்காக அன்றாட வாழ்க்கையோடு பின்னி பிணைந்த செங்கோட்டை-திருநெல்வேலி ரயில் பாதை
அகல பாதையாக மாற்றப்படுவதற்காக கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் நிறுத்தப்பட்டது.
மூன்று ஆண்டுகளாக இந்த வழித்தடத்தில் ரயில் இல்லாமல்
மாணவ, மாணவியரும், அரசு ஊழியர்கள், வர்த்தக பிரமுகர்களு்ம் மிகு்ந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சுமார்
220 கோடிரூபாய் செலவு செய்து அகல ரயில் பாதை
பணி கட்டி முடிக்கப்பட்டு ரயில்வே பாதுகாப்பு
ஆணையரின் சான்றிதழ் பெறப்பட்டு விட்டது. தமிழ்
புத்தாண்டு தினத்தன்று ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
அதனையடுதது இன்று 18ம் தேதி ரயில் இயக்கப்படும் என சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.
ஆனால் ரயில் பெட்டிகள் இல்லை என்பதை காரணம்காட்டி
ரயில்வே நிர்வாகம் கிடப்பில் போட்டுள்ளது.
இதனால் பொதுமக்களும், மாணவ,
மாணவிகளும் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மத்திய ரயில்வே நிர்வாகம்
பின்தங்கிய பகுதியான மேற்கு மாவட்ட பகுதிகளை கண்டுகொள்வதே இல்லை என்ற ஆதங்கம் பொதுமக்கள்
மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தென்காசி நகர மதி்முக மற்றும் ரயில்வே
பயணிகள் நலச்சங்கம் சார்பில் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து ரூ.220 கோடிரூபாய் வேஸ்ட்
என நகர் முழுவதும் பரவலாக போஸ்டர் ஓட்டப்பட்டுள்ளது. விரைவில் ரயில் இயக்கவில்லை எனில்
போராட்டத்தில் ஈடுபடுவோம் என ரயில்வே பயணிகள் நலச்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக