இவர்கள் இந்தியர்களா .....................?

நெல்லை மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 75 நிறுவனங்களுக்கு தொழிலாளர் துறை அதிகாரிகள் 27 ஆயிரத்து 800 ரூபாய் அபராதம் விதித்தனர்.
மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் ராஜா, நெல்லை மண்டல தொழிலாளர் துணை ஆணையர் சுந்தரராஜன் ஆலோசனையின் பேரில் மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் காளிதாஸ் தலைமையில் சுதந்திர தினத்தன்று நேற்று மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிலாளர் துணை ஆய்வர்கள், தொழிலாளர் உதவி ஆய்வர்கள், நெல்லை, பாளை., மேலப்பாளையம், சங்கரன்கோவில், தென்காசி, அம்பாசமுத்தியரம், வள்ளியூர் பகுதியில் உள்ள தொழிலாளர் உதவி ஆய்வர்கள் சிறப்பு ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில் தேசிய பண்டிகை விடுமுறையான சுதந்திர தினத்தன்று கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுனங்கள் பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். மாறாக அன்றைய தினம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்ப சம்பளமோ அல்லது ஊதியத்துடன் கூடிய மாற்று விடுப்போ அளிக்க வேண்டும். அன்றைய தினம் பணிபுரிய விரும்பும் தொழிலாளர்களிடம் சட்ட விதிகளின் படி வரையறுக்கப்பட்ட படிவத்தில் தொழிலாளரின் கையொப்பம் பெற்ற ஒரு நகலினை நிறுவனத்தின் அறிவிப்பு பலகையிலும், மற்றொரு நகலினை 24 மணி நேரத்திற்கு முன் சம்பந்தப்பட்ட தொழிலாளர் துணை அல்லது உதவி ஆய்வாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேற்கண்ட விதிமுறைகளை பின்பற்றாமல் விடுமுறை நாளான சுதந்திர தினத்தன்று  தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி 50 கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், ஒரு பீடி மற்றும் சுருட்டு தயாரிக்கும் நிறுவனம், 19 உணவு நிறுவனங்கள்,  2 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 72 நிறுவனங்கள் மீது உரிய அறிவிப்பு வழங்கப்பட்டு அபராதமாக 27ஆயிரத்து 800 ரூபாய் விதிக்கப்பட்டது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்