இனி ஆட்டையை போடமுடியாது...
 ஆன் லைன் மூலம் கல்வி உதவி தொகைதமிழக அரசு அதிரடி ...முடிவு ...


பள்ளி இறுதி மாணவ, மாணவிகளுக்கு ஆன் லைன் மூலம் கல்வி உதவி தொகை வழங்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் பி்ளஸ் 1, பிளஸ் டூ படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆதி திராவிடர் நலத்துறை மூலம் ஆண்டுதோறும் கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. இதற்காக மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அலுவலகங்களில் விண்ணப்பங்களை மாணவர்கள் பெற்று பூர்த்திசெய்து மீண்டும் பள்ளிகளில் வழங்க வேண்டும். அந்த படிவங்களை பின்னர் மாவட்ட அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதனால் மிகுந்த தாமதம் ஏற்பட்டது.
இதை தவிர்க்க தற்போது அனைத்து பள்ளிகளும் இணையதளம் மூலமே ஆன்லைனில் உதவி தொகைக்கு வி்ண்ணப்பிக்கும் புதிய திட்டம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இந்த திட்டம் திருவாரூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூ், கோவை ஆகிய 5 மாவட்டங்களில் ரூ.12.58 கோடி மதிப்பீ்ட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக நெல்லையில் உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 
இதற்கு முன்பு உதவி தொகை கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்கள் விண்ணப்பம் ஏற்று கொள்ளப்பட்டதா, உதவி பட்டுவாடா செய்யப்பட்டதா என்பதை அறிந்து கொள்ள முடியாது. பள்ளிகளிலும் கேட்டு தெரிந்து கொள்ள முடியாத நிலை இருந்தது. இந்த புதியதிட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாணவர்களுக்கம் பிரத்யோகமாக 19 இலக்க எண் வழங்கபட உள்ளது. இந்த 19 இலக்க எண்ணை பதிவு செய்து மாணவர்கள்  விண்ணபத்தை ஆன் லைன் மூலம் பூர்த்தி செய்து வழங்கலாம். இதன் மூலம் சம்பந்தப்பட்ட மாணவரே விண்ணப்பத்தின் நிலவரம், உதவிதொகையின் நிலவரம் அனைத்தையும் பிரத்யோக எண் மூலம் அறிந்து கொள்ள முடியும். இந்த புதிய திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் டிசம்பர் மாதம் அமுலுக்கு வந்து விடும் என்று கூறப்படுகிறது...மாணவர்களின் கல்வி உதவித்தொகையை இனி யாரும் ஆடையை போட முடியாது..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்