காட்டுதீ


புளியங்குடி மேற்குதொடர்ச்சி மலை வனப்பகுதியில் பிடித்த தீ 3வது நாளாக கொழுத்து விட்டு எரிந்து வருகிறது. வனத்துறையினர் போராடியும் தீ கட்டுக்குள் வரவில்லை.புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலை செல்லும்புளி பீட்டில் நேற்று முன்தினம் திடீரென தீ பிடித்தது. காற்றின் வேகத்தால்தீ நாராணபுரம் பீ்ட் பகுதிக்கும் பரவியது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். குறைந்த அளவிலான வேட்டை தடுப்பு காவலர்கள் மூலம் தீயை அணைக்க முயற்சி நடந்தது. ஆனால் காற்றின் வேகத்தால் தீயை அணைக்க முடியவில்லை. இன்று 3வது நாளாக தீ எரிகிறது.

நேற்று காலை புளியங்குடி  வனசரகம் ஆர்தர்ராஜா, வனவர் முருகையா, வனக்காப்பாளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், சிவகரி வனசரக ஊழியர்கள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அரைகீமி தூரத்திற்கு தீ ஆக்ரோசமாக எரிந்ததால் அவர்களால் நெருங்க முடியவில்லை. இருப்பினும் தீயை அணைக்க அவர்கள் போராடி வருகின்றனர். தீயில் அரிய வகை மூலிகைகள் மற்றும் தாவரங்கள் எரிந்து நாசமாயின.மேலும் கோட்டைமலை  பீட் அருகே உள்ள சோலைக்காடு பகுதியில் மூங்கில் மரங்களும், கோரப்பள்ளம் பகுதியில் தேங்கு, வேங்கை உள்ளிட்ட மரங்களும் தீயில் கருகின.






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்