கொசு ஒழிப்பு தினம்


 நாளை கொசு ஒழிப்பு தினம் கொண்டாடப்படுகிறது. 

டெங்கு காய்ச்சலால் தமிழகத்தில் தென்மாவட்டங்களில்தான் 42க்கும் மேற்பட்டோர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துள்ளனர்.  நெல்லை மாவட்டத்தில் பரவ தொடங்கிய டெங்கு ஒட்டு மொத்த தமிழகத்தையே மிரட்டி வந்தது. தற்போது தீவிரமாக கட்டுபடுத்தப்பட்டு விட்டது டெங்கு காய்ச்சல். டெங்கு வைரஸ் என்ற ஆர்போ வகை வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. 

இக்கிருமி மனிதர்களிடத்தும், எஜிப்பிட்டி என்ற கொசுகளிடத்தும் மட்டுமே வாழக்கூடியது. மனிதர்களிடம் இருந்து கொசுக்கும், கொசுவிடமிருந்து மனிதர்களுக்கும் பரவக் கூடியது. நேரடியாக மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவ வழியில்லை. உலகில் 300 வகை கொசுக்கள் உள்ளது. இதில் 300 வகையான கொசுக்கள் மனிதர்களையும், மிருகங்களையும் கடிக்கும் போது நோய்கள் பரவுகிறது. இதில் ஆண் கொசு கடிப்பதில்லை. பெண் கொசுதான் இனவிருத்திக்காக பல உயிர்களை கடித்து ரத்தத்தை உறிஞ்சுகிறது. 

முக்கியமாக 3 வகை கொசுதான் கொடிய நோய்களை பரப்புகிறது. அனோபிளஸ் என்ற கொசு மலேரியா நோயையும், ஏடிஎஸ், ஏஜிட்டி என்ற கொசு டெங்கு மற்றும் சிக்கன் குனியா நோயையும், கிவுலக்ஸ் என்ற கொசு யானைக்கால் நோயையும், ஜேஇ என்ற கொசு ஜப்பானிய மூளைக்காய்ச்சலையும் பரப்புகிறது என கடந்த 1897 ஆம் ஆண்டு ஆக 20ம் தேதி சர் ரெனால்ட் ரோஸ் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்தார். அந்நாளையே கொசு ஓழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 

நியுலக்ஸ் என்ற கொசு கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகம் காணப்படுவதால் களியாக்கவிளை பகுதியில் பலர் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏடிஎஸ், ஏஜி்ட்டி என்ற கொசுக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல்லை மாவட்டத்தில் அதிகம் காணப்பட்டதால் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு பலர் பலியாகினர் என்பது நினைவிருக்கலாம். விஷ காய்ச்சல் என்று தெரிந்துவிட்டால் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கஷாய பொருட்களை வாங்கி சுண்டகாய்ச்சி ஆறிய பின்னர் குடிக்கலாம். சித்த ஆயுர்வேத ஆஸ்பத்திகளில் இலவசமாக கிடைக்கும் நிலவேம்பு கசாயம் வாங்கி குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். 

வீட்டில் கழிவு நீரோடிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பூந்தொட்டி, மரம், செடி, கொடிகளில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்து கொள்ள வேண்டும். மரம், செடிகொடிகளுக்கு உரிய மருந்து தெளித்திட வேண்டும். அப்போதுதான் டெங்கு, மலேரியா, யானைக்கால் நோயிலிருந்து தப்பித்துகொள்ள முடியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்