தென்காசி பகுதியில் திடீரென மழை 









தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில மாதங்களாக பகல் நேரத்தில் வெயிலின் தாகம் மிகுந்து காணப்பட்டது. சாரல் மழை சரியாக பெய்யாததால் நிலத்தடி நீரும் வேகமாக குறைந்து வந்தது. விவசாயம் பாதிக்கப்பட்டது. மழை வேண்டி கோயில்களில் சிறப்பு பூஜை வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.


இந்நிலையில் நேற்று மாலையில் தென்காசி அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை மேக கூட்டங்கள் சூழ்ந்து காணப்பட்டது. பின்னர் திடீரென மழை பெய்ய துவங்கியது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால் குளிர்ச்சி நிலவியது. ஏற்கனவே வடகிழக்கு பருவ மழை விரைவில் துவங்கி விடும் என வானிலை அறிக்கை கூறியுள்ளது. இந்நிலையில் தென்காசி பகுதியில் நேற்று பெய்த மழை வடகிழக்கு பருவ மழை துவங்குவதற்கு அறிகுறியாக கருதப்படுகிறது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்