கோட்டை கொத்தளத்தில் 12-வது முறையாக தேசியக் கொடி ஏற்றி வைத்தார் ஜெயலலிதா

சென்னை: நாட்டின் 66-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா இன்று காலை 9.30மணிக்கு தேசியக் கொடியேற்றி வைத்து உரை நிகழ்த்தினார். சென்னை கோட்டையில் ஜெயலலிதா 12-வது முறையாக தேசியக் கொடி ஏற்றி வைத்துள்ளார். இந்நிகழ்ச்சியில், காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகள், சமூக சேவகர்கள் உள்ளிட்டோருக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
இன்று காலை தலைமைச் செயலகம் வந்த முதல்வர் ஜெயலலிதா, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார். பின்னர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றினார்.
முதல்வர் உரையைத் தொடர்ந்து காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 11 அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. இந்த விருதுகளுடன், சிறப்பான முறையில் சமூக சேவை செய்தவர்களுக்கும் விருதுகள், ரொக்கப் பரிசுகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். சிறப்பாகப் பணியாற்றிய உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விருது மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கபப்ட்டன.
விருது பெற்ற காவல்துறை அதிகாரிகள்:
1. சி.ராஜேஸ்வரி-சென்னை தெற்கு மண்டல குற்றப் பிரிவு எஸ்.பி.
2. பி.மலைச்சாமி-திருச்சி குற்றப் பிரிவு டி.எஸ்.பி.
3. ச.ஜெயச்சந்திரன்-சென்னை ஒருங்கிணைந்த குற்றப் பிரிவு டி.எஸ்.பி.
4. நா.பாலசுப்பிரமணியன்-சேலம் குற்றப் பிரிவு ஆய்வாளர்.
5. க.அண்ணாதுரை-திருவண்ணாமலை குற்றப் பிரிவு ஆய்வாளர்.
6. கோ.கி.கண்ணன்-விழுப்புரம் நகர காவல் நிலைய ஆய்வாளர்.
பொது சேவைக்கான விருது பெற்றோர்:
1. கி.பி.சண்முகராஜேஸ்வரன்-சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர்.
2. எம்.சுதாகர்-சென்னை குற்றப் புலனாய்வுத் துறை ஏ.எஸ்.பி.
3. சி.ராஜேந்திரன்-தஞ்சாவூர் கியூ பிரிவு டி.எஸ்.பி.
4. சி.புளோரா ஜெயந்தி-தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய டி.எஸ்.பி.
5. ராஜேஸ்வரி-சென்னை மாநகர குற்றப் பிரிவு ஆய்வாளர்.
விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், ரூ.5 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு புனித ஜார்ஜ் கோட்டையில் 4 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.சுமார் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்