சாரல் இல்லாத குற்றாத்தில் சாரல் விழா

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் மிகவும் எதிர்பார்த்த சாரல் திருவிழா இன்று மாலை தொடங்குகிறது. 

இன்று மாலை 6 மணிக்கு குற்றாலம் கலைவாணர் அரங்கில் துவங்கும் விழாவுக்கு கலெக்டர் செல்வராஜ் தலைமை வகிக்கிறார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துறை தலைவர் முருகையாபாண்டியன் முன்னிலை வகிக்கிறார். தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் விழாவை தொடங்கி வைக்கிறார். 

எம்பிக்கள்லிங்கம், தங்கவேலு, ராமசுப்பு, எம்எல்ஏக்கள் சரத்குமார், துரையப்பா, நயினார் நாகேந்திரன், இசக்கி சுப்பையா,  பிசி ராஜேந்திரன், முத்துசெல்வி, நாராயணன், பேரூராட்சி தலைவர் லதா அசோக்பாண்டியன், துணை தலைவர் கணேஷ் தமோதரன், உறுப்பினர் குமார் பாண்டியன் ஆகியோர் பேசுகின்றனர். துவக்க நாளான இன்று மாலை அரசு இசை பள்ளி மாணவ, மாணவிகளின் இசை சங்கமம், 5 மணிக்கு கலைமாமணி திருநங்கை நர்ததகி நடராஜ் நடன குழுவினரின் தமிழ் அமுது நடன நிகழ்ச்சி, இரவு 7 மணிக்கு சென்னை லஷ்மன், ஸ்ரூதி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது. 

சாரல் திருவிழாவை முன்னி்ட்டு 9 மற்றும் 10ம் தேதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடக்கிறது. 9ம் தேதி காலை 10 மணிக்கு நீ்ச்சல் போட்டியும், 11 மணி்க்கு படகு போட்டியும் நடக்கிறது. 10ம் தேதி மாலை 3 மணிக்கு சதுரங்க போட்டியும், 4 மணிக்கு கயிறு இழுத்தல் போட்டியும், மாலை 5 மணிக்கு கோலப்போட்டியும் நடக்கிறது.












கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்