
4 பேர் உடல்கள் இன்று அதிகாலை அடக்கம் செய்யப்பட்டது. நெல்லூர் அருகே தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான முத்துமாலைபுரம் கிராமத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரில் 4 பேர் உடல்கள் இன்று அதிகாலை முத்துமாலையபுரத்திற்குகொண்டு வரப்பட்டு .பின்னர் ..அங்கு அடக்கம் செய்யப்பட்டது . ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.நெல்லை மாவட்டம் கடையம் அருகேயுள்ள ஐந்தான்கட்டளை பஞ்.,சிற்கு உட்பட்ட முத்துமாலைபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி கனகஜோதி. இவர்களது மகள் பொன்மணி(30). இவருக்கும், மானூர் அருகேயுள்ள வாகைகுளத்தை சேர்ந்த எலிசபெத் மகன் டேவிட்ராஜாவிற்கும் கடந்த 2005ம் ஆண்டு திருமணம் நடந்தது.டேவிட்ராஜா தற்போது கான்பூரில் எல்லைப்பாதுகாப்பு படையில் வேலை பார்த்து வருகிறார். டேவிட்ராஜா, பொன்மணிக்கு ரோஸி(7), ஜாஸ்மின்(4) ஆகிய இரு பெண் குழந்தைகள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் விடுமுறைக்கு டேவிட் ராஜா ஊருக்கு வருவது வழக்கம். இந்த ஆண்டு 15 நாட்கள் தான் விடுமுறை கிடைத்துள்ள...