மெயின் அருவி மக்கள் கூட்டத்தால் களை கட்டியது 

 குற்றாலம் பகுதியில் இதமான சூழல் நிலவியது.குற்றாலம் பகுதியில் தென்மேற்கு பருவமழை தவறி வந்த நிலையில் நேற்று இரவு முழுவதும் மலைப்பகுதியில் சாரல் மழை பெய்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவியில்  தண்ணீர் சற்று அதிகரித்து காணப்பட்டது. இங்கு சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் 30 நிமிடம் காத்திருந்து குளித்து சென்றனர்.மெயின் அருவியில் பரவலாகவும், ஐந்தருவியில் 5 கிளைகளிலும் தண்ணீர் விழுந்தது.  விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பழைய குற்றால அருவியில் குறைந்த அளவே தண்ணீர் விழுந்தபோதும் சுற்றுலா பயணிகள் ஆரவாரமாய் குளித்து மகிழ்ந்தனர்.காலை முதலே மெயின் அருவி மக்கள் கூட்டத்தால் களை கட்டியது . வன பகுதியில் விடிய.. விடிய..பெய்த சாரல் மழையால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது .








கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்