சுற்றுலா பயணிகளுக்காக எலக்ட்ரானிக் டாய்லட் திறப்பு


குற்றாலம் சரத்குமார்  ஏற்பாட்டில் எலக்ட்ரானிக் டாய்லட் ரூ.7.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு இன்று திறக்கப்பட உள்ளது. மெயினருவி அருகே சுமார் 45  சதுர அடியில் அமைக்கப்பட்டு்ள்ள இந்த டாய்லட்டை பராமரிக்க மனிதர்கள் தேவையில்லை. இரண்டு ரூபாய் அல்லது இரண்டு 1 ரூபாய் நாணயத்தைசெலுத்தினால் தானாகவே கதவு திறந்து கொள்ளும். பின்னர் உள்ளே உள்ள கதவை திறந்து கொள்ளலாம். மனிதர்கள் வெளியேற்றும் கழிவானது சுமார் இரண்டாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பைபர் டேங்கில் சேகரிக்கப்படுகிறது. அதில் உள்ள பாக்டீரியா தொழில் நுட்பமானது கழிவுகளை சுத்தப்படுத்தி மற்றொரு டேங்கிற்கு வெறும் தண்ணீர் மட்டும் செல்கிறது. இந்த தண்ணீரானது மீண்டும் உபயோகப்படுத்தும் அளவுக்கு மறு சுழற்சி செய்யப்படுகிறது.

ஆனால் தற்போது குற்றாலத்தில் அமைக்கப்பட்டுள்ள டாய்லட்டில் இந்த மறு சுழற்சி முறை மட்டும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. டாய்லட்டில் தண்ணீர், மின்விசிறி வசதி ஆகியவை செய்யப்பட்டுள்ளன. டாய்லட்டை சுபயோகப்படுத்துபவர்கள் சுத்தப்படுத்த மறந்தாலும் தானாகவே சுத்தப்படுத்தி கொள்ளும் வகையில் சென்சர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. 




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்