நெல்லை அருகே சப் இன்ஸ் பெக்டர் கொலை ....
தென்காசி அருகே உள்ள சுரண்டை காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ் பெக்டராக
பணி புரிந்து வருபவர் இசக்கி முத்து இவரும் இதே காவல் நிலையத்தில் ரைட்டராக
பணி புரிந்து சுத்தமல்லி காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்ய பட்டவருமான
சண்முகராஜா வும் காவல் நிலையம் அருகே ஒரு வீட்டில் தங்கி இருந்துள்ளனர்
.இன் நிலையில் (தான்)சண்முக ராஜா இட மாற்றம் செய்ய பட்டதற்கு இசக்கி தான்
காரணம் என்று கருதிய சண்முகராஜா இன்று சுரண்டைக்கு வந்து இசக்கியிடம் வாக்கு
வாதத்தில் ஈடு பட்டுள்ளார் .வாக்கு வாதம் முற்றவே ..கோபம் அடைந்த சண்முகராஜா
மறைத்து வைத்திருந்த கத்தியால் சப் இன்ஸ் பெக்டர் இசக்கி முத்துவை குத்தி உள்ளார்
இதனை எதிர் பாராத சப் இன்ஸ் பெக்டர் இசக்கி முத்து சப்தம் போடவே அருகிலிரு ந்த
பொது மக்கள் ஓடி வரவே சண்முகராஜா தப்பி ஓடி விட்டார் .வீரைந்து வந்த காவல்
துறை யினர் உயிருக்கு போராடிய சப் இன்ஸ் பெக்டர் இசக்கி முத்துவை ஆம்புலன்ஸ்
மூலம் பாளையம் கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .மருத்துவமனைக்கு
கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாப மாக உயரி ழந்தார்.இச் சம்பவம் நெல்லை
மாவட்ட காவல் துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுதிள்ளது .
நெல்லை சரக காவல் துறை தலைவர் வரதராஜூ ,நெல்லை மாவட்ட கண்காணிப்பாளர்
விஜயேந்திர பிடரி, ஆகியோர் பாளையம் கோட்டை அரசு மருத்துவமனைக்கு நேரில்
சென்று பார்வை யிட்டு தப்பி ஓடிய ஏட்டு சண்முக ராஜா வை கைது செய்ய
தனி படை அமைத்து உத்திரவிட்டுள்ளனர் .
கருத்துகள்
கருத்துரையிடுக