குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளின் கூட்டம் 




 கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில்
 கடந்த ஒருவார காலமாகஇரவு நேரங்களில் பெய்து வரும் சாரல் மழை காரணமாக
  குற்றாலம் மெயினருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்தது. புலியருவி,
பழைய குற்றால அருவிகளில் மிதமாக தண்ணீர் விழுந்தது. மெயினருவியில் வெயிலையும்
பொருட்படுத்தாமல் ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று குளித்தனர்.தடை
செய்யப்பட்ட பழத்தோட்டம் அருவியில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது இதனால்
 ஐந்தருவியிலும் தண்ணீர் வரத்து உள்ளது .
ஐந்தருவியில் 5 கிளைகளிலும் விழுந்த தண்ணீரில் சுற்றுலா பயணிகள் கூட்டமாக
குளித்து மகிழ்ந்தனர். புலியருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டமின்றி காணப்பட்டது.
பழைய குற்றாலத்தில் ஓரளவு தண்ணீர் விழுந்தபோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்
அதிகரித்து காணப்பட்டது.சித்தருவியில் தண்ணீர் கொட்டினாலும் குறைந்த அளவே
பயணிகள் கூட்டம் காணப்பட்டது.குற்றாலம் பகுதியில் தென்மேற்கு பருவக்காற்று
தீவிரமாக வீசி வந்ததால் வெயிலின் தாக்கம் தெரியவில்லை.விடுமுறை தினம்
என்பதால் பல இடங்களில் போக்கு வரத்து நெரிசல் ஏற்ப்பட்டது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்