சுற்றுலாத்துறை மூலம்
மேக்கரை-அச்சன்கோவில் சாலையை சீரமைக்க ரூ.3.50 கோடி நிதி ஒதுக்கீடு
அமைச்சர் செந்தூர்பாண்டியன் தகவல்

இதுகுறித்து அமைச்சர் செந்தூர்பாண்டியன் கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்கும் பொருட்டு போர்கால நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ள உத்தரவின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் அதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. குடிநீர் வடிகால் வாரியத்திற்கு சிறப்பு நிதியாக 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக ஐயப்ப பக்தர்கள் மற்றும் பயணிகளால் வலியுறுத்தப்பட்டு வந்த மேக்கரை - அச்சன்கோவில் சாலை 3.50 கோடி ரூபாய் செலவில் அகலப்படுத்தி புனரமைப்பு செய்ய சுற்றுலாத்துறை மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த சாலை அகலபடுத்தபட வேண்டும் என சுமார் 40 ஆண்டு காலமாக வலியுறுத்தப்பட்டு வந்த கோரிக்கை முதல்வர் ஜெ., உத்தரவின் அடிப்படையில் மேற்கொள்ளபட்டுள்ளது.

மாதத்திற்கு ஒருமுறை பெட்ரோல் விலையை உயர்த்துவதுதான் மத்தியில் ஆளும் காங்., கூட்டணி அரசின் செயல்பாடாக இருந்து வருகிறது. கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுகவோ விலை உயர்வை பற்றி பேசாமல் தமிழக மக்களுக்கு தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வரும் மத்திய அரசிற்கு துணையாக இருக்கிறது. மத்திய அரசை பொருத்தவரை கொள்கை முடிவு ஏதும் எடுக்க முடியாமல் திணறி வருகிறது. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியே கடந்த மூன்றரை ஆண்டுகால ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்