மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி- மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி-கே.செல்லப்பெருமாள்- இயற்கை இறைவனால் படைக்கப்பட்ட களஞ்சியம். இயற்கையை பாடும் புலவர்கள் நாடு, நகர், மலை, மரம், செடி, கொடி, ஆறு என அனைத்தையும் பாடுகின்றனர். வரலாற்றை வளம் பெறச்செய்த குற்றாலம் வண்டமிழ் புலவர்களை வியப்படைய செய்து பல்வேறு இலக்கியங்களை படைக்க தூண்டியது.நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானசம்பந்தர் முதல் குறவஞ்சியால் பெரும்புகழ் பெற்ற திரிகூடராசப்பக் கவிராயர் வரை குற்றாலத்தின் இயற்கையழகை பாடியுள்ளனர். அத்தகைய வகையில் படைக்கப்பட்ட இலக்கியங்களுள் தலைசிறந்ததாய் தலச்சிறப்பையும் உணர்த்தக்கூடியது திருக்குற்றால கோவை ஆகும்.பாண்டிய மன்னர்களுக்கு பெருமை சேர்த்த 14 நகரங்களுள் ஒன்று குற்றாலம். அம்மன்னர்கள் தம் பெயரோடு இணைத்து கொண்ட நகர்கள் ஐந்து. அவற்றுள் ஒன்று பொதிகை. பொதிகை வெற்பன், பொதிகை பொருப்பன் என சூடாமணி நிகண்டிலும், திவாகர் நிகண்டிலும் கூறப்பட்டிருப்பதை காண முடிகிறது. பொற்கோட்டு இதயமும், பொதியமும் போன்று வாழ்க என்பது புறநானுற்று பாடல் வரிகள்.வரை என்ற சொல் மலை எனும் பொருள் தரும். திரிகூடமலை என்பதால் திரிகூட ...
இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்
செங்கோட்டை முதல் புனலூர் வரையிலான அகல பாதை அமைக்கும் பணி 2010ம ஆண்டு துவங்கி பல்வேறு கட்டங்களாக பிரி்க்கப்பட்டு வேலை நடைபெற்று வருகின்றன. 120க்கும் மேற்பட்ட சிறிய பாலங்களும், 5க்கும் மேற்பட்ட பெரிய பாலங்களின் வேலைகளும நடைபெற்று வருகின்றன. சுமார் 4.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு 5 பகுதிகளில் மலை குகைகள் உள்ளன. கேரள பகுதியில் 4 சிறிய குகைகளும், தமிழக பகுதியில் 1 பெரியகுகையும் உள்ளது. இவற்றில் கடின பாறைகள் கொண்ட 3குகைகளை அகலப்படுத்தும் பணி நிறைவுபெற்று விட்டது. 5வது குகையை அகலப்படுத்தும் பணி ஓரிரு வாரங்களில் தொடங்கி விடும் என்று இதன் பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர். ரூபாய் 355 கோடி செலவில் நடைபெற்று வரும் இப்பணியில் இரும்பு பாதை, மலைக்குகைகளை அகல்படுத்துதல், சமதளத்தை விரிவுப்படுத்துதல் என பிரிக்கப்பட்டுள்ளன. சுமார் 12 கோடி ரூபாய் செலவில் 5 குகைகளையும் அகலப்படுத்தும்பணி தற்போது விரைவுப்படுத்தப்பட்டுள்ளது.தமிழக எல்லையில் அமைந்துள்ள குகையின் முன்பக்கம் செயற்கைகுகை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. 1000 மீட்டர் நீளம்கொண்ட இந்த குகையே இப்பகுதியில் அமைந்துள்ள குகையில் மிக நீள குகையாகும். இதன் முகப்பு...
சுதந்திரம் அடைந்து 60 ஆண்டு காலம் ஆகிவிட்டது..............
சென்னையில் நடந்த, 5வது தூண் அமைப்பின் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு புத்தகமான, மக்களாகிய நாம் வெளியீடு சென்னையில் நடந்தது. இதில் சகாயம் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். தேமுதிக எம்.எல்.ஏ. மாபோ பாண்டியராஜன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் தமிழகத்தை உலுக்கியுள்ள கிரானைட் கொள்ளையை அம்லப்படுத்தி அரசுக்கு அறிக்கை அளித்த மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் சகாயம் பேசியதாவது... நமது தேசம் எப்படிப்பட்ட தேசமாக இருந்தது. இன்று லஞ்சமும், ஊழலும் எங்கும் வியாபித்து உள்ளன. நாட்டின் முன்னேற்றத்திற்கு அவை பெரும் தடைகளாக இருக்கின்றன. ஏழைகளிடம் இரக்கம் காட்டலாம். ஆனால், தவறு செய்தவர்கள் மீது இரக்கம் காட்டவே கூடாது. தவறு செய்தவர்கள் மீது நான் கடும் நடவடிக்கை எடுத்துள்ளேன். தவறு செய்த யாரையும் விட்டுவிட மாட்டேன். நமது தேசம் சுதந்திரம் அடைந்து 60 ஆண்டு காலம் ஆகிவிட்டது. மாற்றம் வந்தாக வேண்டும். அந்த மாற்றத்தை உருவாக்கக்கூடிய சக்தி மாணவ-மாணவிகளிடமும், இளைஞர்களிடமும் இருக்கிறது. லஞ்ச, ஊழலை ஒழிக்க விரும்பும் எல்லோரும் ஒன்று சேர்ந்தால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ந...

















கருத்துகள்
கருத்துரையிடுக