எஸ்ஐ கொலை-அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி 


கொலை செய்யப்பட்ட எஸ்ஐ இசக்கி முத்து வின் உடல் அடக்கம் எலஞ்சியில் நடை பெற்றது எஸ்ஐ கொலை செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது.
கொலையான சிறப்பு எஸ்ஐ இசக்கி 10 ஆண்டுகளுக்கு முன் முன்னீர் பள்ளம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றியுள்ளார். அப்போது ஒரு வழக்கு விசாரணையின் போது அங்கு பணியாற்றிய எஸ்ஐயை பொதுமக்களில் ஒருவர் அடித்து விட்டாராம். இதற்குகாரணம் இசக்கிதான் என மேலிடத்திற்கு புகார் சென்றதால் அவரை எஸ்பி சஸ்பெண்ட் செய்துள்ளார். மீண்டும் பணிக்கு வந்த அவர் வேறு ஊருக்கு மாறுதலாகி சென்றுள்ளார். இசக்கி பணியின்போது பல குற்றசாட்டுகள் அவர் மீது இருந்துள்ளது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன் போதையில் சுரண்டை போலீஸ் நிலையம் சென்ற ஏட்டு சண்முகராஜ் அங்கு பணியில் இருந்த இசக்கியுடன் கடுமையாக வாக்குவாதம் செய்தார். இங்கு நல்ல வருமானம் பார்த்து ராஜா மாதிரி இருந்த என்னை உன்னால்தான் மாற்றிவிட்டனர். இப்போது ஓன்றும் இல்லாமல் இருக்கிறேன். இதற்குகாரணமான உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று கூறி அடிக்க பாய்ந்துள்ளார். அப்போது போலீஸ் ஸ்டேசனுக்கு புகார் கொடுக்க வந்த பொதுமக்கள் முன்னிலையில் இருவரும் கட்டி புரண்டு சண்டை போட்டுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என கருதிய இசக்கி 4 நாள் லீவு போ்ட்டு விட்டு ஊரில் இருந்துள்ளார்.

எஸ்ஐ இசக்கியை பலி தீர்க்க வேண்டும் என்ற வெறியில் இருந்த ஏட்டு சண்முகராஜ் நேற்று சுத்தமல்லிக்கு வேலைக்கு சென்றார். ஆனால் அவரை பத்தமடையில் டூட்டி பார்க்க அனுப்பி விட்டனர். அவர் அங்கு செல்லாமல் கோட்டையூருக்கு சென்று பூனிபார்மை கழற்றி வைத்து விட்டு மப்டியில் மாலை 4 மணிக்கு சுரண்டை சென்றார். அங்கு பாரா போலீஸ்காரரிடம் எஸ்ஐ இசக்கி மற்றும் எஸ்பி ஏட்டு ஆகியோர் இருக்கிறார்களா என கேட்டுள்ளார். அவர் இல்லையென்றவுடன் போலீசார் தங்கியிருந்த அறைக்கு சென்றார். அங்கு கதவை பூட்டிக் கொண்டு உள்ளே இசக்கி இருப்பதை அறிந்த சண்முகராஜ் குரலை மாற்றி உங்களை ஸ்டேசனில் கூப்பிடுகிறார்கள், கதவை திறங்கள் என்று கூறவே போலீஸ் உடையை மாற்றிக் கொண்டிருந்த இசக்கி கதவை திறந்தார். உள்ளே புகுந்த சண்முகராஜ் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவரும் கட்டி புரண்டு சண்டை போட்டுள்ளனர். அப்போது சண்முகராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இசக்கியை குத்தி விட்டு கதவை பூட்டி விட்டு தப்பியேடிவிட்டார்.

கொலை செய்யப்பட்ட எஸ்ஐ இசக்கி முத்து வின் உடல் அடக்கம் எலஞ்சியில் நடை பெற்றது இதில் நெல்லை சரக காவல் துறை தலைவர் வரதராஜூ, நெல்லை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் விஜெயந்திர பிதரி ,உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர் ...
 குடும்பத்திற்கு அறுதல் கூறும் எஸ்.பி.
 உடல் கொண்டு செல்ல படுகிறது 

 மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் டிஐ.ஜி .
 இருபத்தி நான்கு குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தும் டிஐ.ஜி,எஸ்,பி  மற்றும் காவல் துறை யினர் .


 அஞ்சலி செலுத்தும் டிஐ.ஜி,எஸ்,பி  மற்றும் காவல் துறை யினர் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்