இன்றுநடந்த விபத்துகளில் எழுபது பேர் பலி 



இந்தியாவில் இன்று நடந்த இரு பெரிய விபத்துக்களில் மொத்தம் எழுபது பேர் பலி யாகி உள்ளனர்
டில்லியிலிருந்து சென்னை வந்த , தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் பயணிகள் பலியானார்கள்.டில்லியிலிருந்து சனி இரவு 10.30 மணிக்கு புறப்பட்டுசென்னைக்கு வந்துகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே வந்து அதிகா‌லை 4.30 மணிக்கு புறப்பட்ட‌போது 11வது பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் அறி்ந்து ரயில் பெட்டிகள் உடனடியாக அகற்றப்பட்டு பயணிகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். ‌பலர் காயமடைந்துள்ளனர். நெல்லூர் மாவட்ட கலெக்டர் சம்பவ இடத்திற்‌கு விரைந்த‌ார். அங்கு கலெக்டர் கூறுகையில், இது வரை 25 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் ஐம்பது பேர் பலியாகி உள்ளதாகவும் ,முப்பதுக்கும் மேற்பட்டோர் ..பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் ..தகவல்கள் கூறுகின்றன ....மின் கசிவு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. இன்னும் சிலர்
பெட்டியில் பலியாகியிருக்கக்கூடும் என கூறினார்.இந்நிலையில் அரியானா மாநிலத்தில் நடந்த ட்ரக்குகள் மோதலில் இருபத்தி ஐந்து பக்தர்கள் பலியாகி உள்ளனர் ..
இந்த ஆண்டு நடந்த ரயில் விபத்துக்கள் விபரம் வருமாறு :
ஜம்மு வில் 15பேரும்,கோழிகோடு 4பேரும்,பாட்னா 7பேரும்,உ .பீ 15 பேரும்,குப்லே14 பேரும்,ஹவ்ரா14 பேரும்,மிதாபூர1பேரும்.தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் 47 பேரும் ஆக மொத்தம் 125.பேர் ,பலியாகி  உள்ளதாக ரயில்வே வட்டார தகவல்கள் கூறு கின்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்