அடுத்தடுத்து குடிபோதைக்கு 3 குடிமகன்கள் பலி
பெருகி வரும் மதுக்கடைகளால் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும் அதே வேளையில் பல குடும்பங்கள் தெருவுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் அடுத்தடுத்து 3 குடிமகன்கள் உயிரை மாய்த்த சம்பவம் நடந்துள்ளது.
நெல்லை மாவட்டம் வி.கே.புரத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன். குடிப்பழக்கத்திற்கு அடிமையான அவரால் குடும்பத்தில் நாள்தோறு்ம் பிரச்சனை தலை தூக்கியது. தினமும் சண்டை, அடி உதையுடன் இரவு பொழுதுகள் கழிந்தன. இதனால் குடிபோதையில் வீட்டுக்கு வந்த ஐயப்பன் வீட்டு உத்திரத்தில் தூக்கில் தொங்கினார்.
இதே போன்று கடையநல்லூர் மங்களாபுரத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் உணவு உண்ண மறந்தாலும் மது குடிக்க மறப்பதில்லை. நாள் தவறாமல் குடித்ததால் அவரது குடல் வெந்து வயிற்றில் புண் வந்தது. இதனால் வயிற்று வலியை தாங்க முடியாமல் மேலும் மேலும் குடிக்கத் தொடங்கினார். அதற்கு பலன் கிடைக்காத நிலையில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு வீட்டு அருகே உள்ள மைதானத்திற்கு சென்று உயிரைவிட்டார்.
மேலும் திருவேங்கடம் உடப்பன்குளத்தைச் சேர்ந்த கோட்டையப்பன் என்பவர் டாஸ்மாக் ஊழியராக பணியாற்றி வந்தார். தான் பணியாற்றிய மதுக்கடையிலேயே தினமும் குடித்து மகிழ்ந்தார். நேற்று முடிந்தவரை வயிறு முட்ட குடித்துவிட்டு அவர் திருவேங்கடம் பாலம் அருகே தள்ளாடிச் சென்று தலைகுப்புற விழுந்து அங்கேயே பலியானார். 3 பேரும் அடுத்தடுத்து குடிபோதைக்கு உயிரிழந்ததால் அவர்களது குடும்பத்தினர் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக