கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை பெய்யும். பெரும்பாலும் ஜூன் 1ம் தேதியே பருவ மழை தொடங்கி விடும். இந்தாண்டு 10 நாட்கள் தாமதமாகவே தொடங்கியது. பருவமழை தாமதமாக தொடங்கினாலும் எதிர்பார்த்த அளவு மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருந்தது. ஆனால் அது பொய்யாகி விட்டது.

கோழிக்கோடு, காசர்கோடு உள்ளிட்ட வடகேரளாவில் மட்டுமே ஓரளவு மழை பெய்தது. மற்ற மாவட்டங்களில் மழையின் அளவு மிக மிக குறைந்தது. ஜூன் முதல் ஜூலை 24ம தேதி வரை 1232 மிமீ மழை பெய்யும். ஆனால் நேற்று வரை 752 மிமீ வரைதான் மழை பெய்துள்ளது. இது சராசரி அளவை விட 39 சதவீதம் குறைவு. திருவனந்தபுரம் வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் சந்தோஷ் கூறுகையில் கேரளாவில் பருவமழை 39 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. வழக்கமாக தென்மேற்கில் இருந்து வீசும் காற்று தான் மழையை கொண்டு வரும் காற்று திசை மாறி வீசுவதால் மழை குறைந்து விட்டது என்றார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்