4 பேர் உடல்கள் இன்று அதிகாலை அடக்கம் செய்யப்பட்டது. 











நெல்லூர் அருகே தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான முத்துமாலைபுரம் கிராமத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரில் 4 பேர் உடல்கள் இன்று அதிகாலை முத்துமாலையபுரத்திற்குகொண்டு வரப்பட்டு  .பின்னர் ..அங்கு அடக்கம் செய்யப்பட்டது .
 ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.நெல்லை மாவட்டம் கடையம் அருகேயுள்ள ஐந்தான்கட்டளை பஞ்.,சிற்கு உட்பட்ட முத்துமாலைபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி கனகஜோதி.
 இவர்களது மகள் பொன்மணி(30). இவருக்கும், மானூர் அருகேயுள்ள வாகைகுளத்தை சேர்ந்த எலிசபெத்
மகன் டேவிட்ராஜாவிற்கும் கடந்த 2005ம் ஆண்டு திருமணம் நடந்தது.டேவிட்ராஜா தற்போது கான்பூரில்
எல்லைப்பாதுகாப்பு படையில் வேலை பார்த்து வருகிறார். டேவிட்ராஜா, பொன்மணிக்கு ரோஸி(7),
ஜாஸ்மின்(4) ஆகிய இரு பெண் குழந்தைகள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் விடுமுறைக்கு டேவிட் ராஜா
ஊருக்கு வருவது வழக்கம். இந்த ஆண்டு 15 நாட்கள் தான் விடுமுறை கிடைத்துள்ளது. இதனால்
டேவிட் ராஜா ஊருக்கு வரவில்லை.இதனால் கடந்த 15 தினங்களுக்கு முன் டேவிட்ராஜாவின் தாய் எலிசபெத்(52), பொன்மணி(30), ரோஸி(7), ஜாஸ்மின்(4), பொன்மணியின் தம்பி தவமணி(29) ஆகிய 5 பேரும் கான்பூர் சென்று டேவிட்ராஜாவுடன்
விடுமுறை நாட்களை கழித்தனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன் டில்லியிலிருந்து புறப்பட்டு
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஊருக்கு வந்துள்ளனர்.இந்நிலையில் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே
 தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் "எஸ்-11' பெட்டி முற்றிலும்
எரிந்து சாம்பலானாது. அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சுத்திணறியும், தீயில் கருகியும் ஏராளமானோர்
பலியாயினர். தீ விபத்து நடந்த "எஸ்-11' பெட்டியில்தான் பொன்மணி உட்பட 5 பேரையும் டேவிட்ராஜா
ஏற்றி, வழியனுப்பி வைத்துள்ளார். ரயிலில் பயணம் செய்த தனது குடும்பத்தினர் என்ன ஆனார்கள் என்பது
குறித்த தகவலை டேவிட்ராஜாவால் உறுதி செய்ய முடியவில்லை. தனது குடும்பத்தினர் வைத்திருந்த
செல்போன்களையும் தொடர்பு கொள்ள முடியாததால் டேவிட்ராஜா தகவல்களை பெற முடியாமல் தவித்தார்.
தீ விபத்தில் உடல்கள் கருகிய நிலையில் இருந்ததால் அவற்றை அடையாளம் காணுவதில் ரயில்வே
நிர்வாகத்திற்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால் டேவிட்ராஜா கான்பூரில் இருந்து நெல்லூருக்கு விமானம் மூலம் அவசரமாக சென்றார். இதனிடையே தீ விபத்து ஏற்பட்ட சம்பவத்தில் டேவிட்ராஜாவின் மனைவி பொன்மணி உட்பட 5 பேர் பலியானது உறுதி
செய்யப்பட்ட நிலையில் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர். இதனால் முத்துமாலைபுரம் கிராமமே சோகத்தில்
மூழ்கியுள்ளது. இவரது உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இந்நிலையில் சம்பவ இடத்தில் ஏராளாமானோர் தங்களது உறவினர்கள் உடல்களை பெற சோகத்தில் குவிந்திருந்தனர். விபத்தில் பலியான தனது குடும்பத்தினரை டேவிட்ராஜா அடையாளம் காட்டினார். டேவிட் ராஜாவின் தாயார் எலிசபெத் உடலை ஆந்திராவை சேர்ந்த ஒருவரும் சொந்தம் கொண்டாடினார்.
இதனால் எலிசபெத் உடலை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. டிஎன்ஏ., பரிசோதனைக்கு பின்பே எலிசபெத்
உடல் ஒப்படைக்கப்படும் என டேவிட்ராஜாவிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.தனது மனைவி பொன்மணி, குழந்தைகள் ரோஸி, ஜாஸ்மின், மைத்துனர் தவமணி ஆகியோரின் உடல்களை மட்டும் டேவிட்ராஜா பெற்றுக் கொண்டார். உடல்களை பெற்றுக் கொண்ட டேவிட்ராஜா, நேற்று காலை 8 மணிக்கு நெல்லூரில் இருந்து ஆம்புலன்ஸ்சில் புறப்பட்டார். இன்று அதிகாலை
 நான்கு மணிக்கு முத்துமாலையபுரத்திற்குகொண்டு வரப்பட்டு  .பின்னர் ..அங்கு அடக்கம் செய்யப்பட்டது.










கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்