பாபநாசம்-பாணதீர்த்த அருவிக்கு செல்ல திடீர் தடை-சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி
நெல்லை

புலிகள் சரணாலாய பகுதிகளில் சுற்றுலா மேற்கொள்ள கூடாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் எதிரோலியாக களக்காடு, முண்டத்துறை புலிகள் காப்பாக பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேசிய விலங்கான புலிகள் இனத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் புலிகள் சரணாலயங்களில் அமைக்கப்பட்டுள்ள கடைகள், கட்டிடங்கள் உள்ளிட்ட வர்த்தக மையங்களை நீக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர் அஜய்துபே என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தார். அதை தொடர்ந்து புலிகள் சரணாலாயத்தை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக 3 வாரத்திற்குள் நிர்ணயம் செய்யும்படி மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவி்ட்டது. இந்த கெடு முடிந்தும் அமுல்படு்த்ததால் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு நேற்று முன்தினம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு அளிக்கும் வரை புலிகள் சரணாலயத்தின் உள்பகுதியில் சுற்றுலா நடவடிக்கை எதையும் மேற்கொள்ள கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

இந்த அதிரடி உத்தரவால் இந்தியாவின் கடைகோடி புலிகள் சரணாலயமான நெல்லை மாவட்டம் களக்காடு, முண்டத்துறை புலிகள் காப்பாக பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நெல்லையில் களக்காடு முண்டத்துறை புலிகள் காப்பாக இயக்குனர் பொறுப்பு சண்முகசுந்தரம், இணை இயக்குனர் சேகர் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். சுப்ரீம் கோர்ட் உத்தரவை உடனடியாக புலிகள் காப்பாக பகுதியில் செயல்படுத்த அவர்கள் முடிவெடுத்தனர். இதன்படி களக்காடு முண்டத்துறை புலிகள் காப்பகத்தில் சுப்ரீம் கோர்டில் இருந்து மறு உத்தரவு வரும்வரை சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

களக்காடு புலிகள் காப்பகத்தில் செங்கல்தேரி, தலையணை, தேங்காய்உருளி, நம்பி கோயில் உள்ளிட்ட இடங்களும், முண்டத்துறை புலிகள் காப்பகத்தில் அகஸ்தியர் அருவி, பாணதீர்த்த அருவி, சொரிமுத்து அய்யனார் கோவில், மாஞ்சோலை உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் இனிமேல் செல்ல கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்