கலப்படமில்லா உணவு
உணவு உலகத்தில், உணவு கலப்படம் மற்றும் உணவு பாதுகாப்பு குறித்து, புதிய பயனுள்ள செய்திகள் இடம் பெரும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள். புதிய கலப்படமில்லா உணவு பாதுகாப்பாக கிடைக்க வழி அமைப்போம்.
சைவ உணவே சத்தென்று சாப்பிடும் சமத்து பிள்ளைகளா நீங்கள்! பச்சை பசேலென பசுமையாக, பாத்தவுடன் பட்டென்று எடுத்து கடித்துவிட தோன்றுகிறதா? கவனம்! கலப்படம் -காய்கறியிலும் கால் பதித்து விட்டதாம்.
வாழை பழங்களையும், மாம்பழங்களையும் கந்தக கல் கொண்டு பழுக்க வைத்தனர். வந்து குவிந்த வசதியினால், காசு பணம் பார்ப்பது மட்டுமே தம் கவலை என்று காய்கறியிலும் கலப்படத்தை புகுத்தியுள்ளனர். கவனம்!

பால் கறக்கும் மாட்டில் இதை பயன்படுத்தினால், அந்த ஹார்மோன், பசு தரும் பாலிலும் கலந்து, அதை அருந்தும் மனித உடலிலும் கலந்து, சிறுமிகள் விரைவில் பூப்பெய்திடவும், கர்ப்பிணிகள் கர்ப்பம் தொலைத்திடவும் காரணிகளாய் அமைகின்றன. "ஆக்சிடோசின் " மருந்து ஏற்றிய காய்கறிகளையும் பழங்களையும் சாப்பிடுவதால் இதய கோளாறுகள் இனிதே வந்து சேரும். நரம்புகள் பாதிப்பதால், மறதியும், மலட்டு தன்மையும் மறக்காமல் வந்து சேரும் அத்தகைய அருமருந்தை, காய்கறி செடிகளில் ஏற்றி, காய்கறிகள் மற்றும் பழங்கள் பச்சை பசேலென பழபழக்க பக்குவபடுத்துகின்றனர்.
மனிதா உன் பேராசைக்கு மரித்து விட்டதோ மனிதங்கள்! உன் வீட்டிலும் ஒருவன் படுத்துவிட்டால்தான் அந்த வலி உனக்கு புரியுமென்றால், இறப்பதற்கு இங்கு மனிதர்களே இருக்க மாட்டார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக