ஐந்து அருவி படகு குழாம்
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி- மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி-கே.செல்லப்பெருமாள்- இயற்கை இறைவனால் படைக்கப்பட்ட களஞ்சியம். இயற்கையை பாடும் புலவர்கள் நாடு, நகர், மலை, மரம், செடி, கொடி, ஆறு என அனைத்தையும் பாடுகின்றனர். வரலாற்றை வளம் பெறச்செய்த குற்றாலம் வண்டமிழ் புலவர்களை வியப்படைய செய்து பல்வேறு இலக்கியங்களை படைக்க தூண்டியது.நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானசம்பந்தர் முதல் குறவஞ்சியால் பெரும்புகழ் பெற்ற திரிகூடராசப்பக் கவிராயர் வரை குற்றாலத்தின் இயற்கையழகை பாடியுள்ளனர். அத்தகைய வகையில் படைக்கப்பட்ட இலக்கியங்களுள் தலைசிறந்ததாய் தலச்சிறப்பையும் உணர்த்தக்கூடியது திருக்குற்றால கோவை ஆகும்.பாண்டிய மன்னர்களுக்கு பெருமை சேர்த்த 14 நகரங்களுள் ஒன்று குற்றாலம். அம்மன்னர்கள் தம் பெயரோடு இணைத்து கொண்ட நகர்கள் ஐந்து. அவற்றுள் ஒன்று பொதிகை. பொதிகை வெற்பன், பொதிகை பொருப்பன் என சூடாமணி நிகண்டிலும், திவாகர் நிகண்டிலும் கூறப்பட்டிருப்பதை காண முடிகிறது. பொற்கோட்டு இதயமும், பொதியமும் போன்று வாழ்க என்பது புறநானுற்று பாடல் வரிகள்.வரை என்ற சொல் மலை எனும் பொருள் தரும். திரிகூடமலை என்பதால் திரிகூட ...
கருத்துகள்
கருத்துரையிடுக